யாழ்.செயலகத்தில் நேற்று(திங்கட்கிழமை) சில நாய்கள் வந்து குரைத்துக்கொண்டிருந்தன. உங்களிற்கும் அது கேட்டதாவென கேள்வி எழுப்பியுள்ளார் வடமாகாண ஆளுநரும் முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி. நேற்று செவ்வாய்க்கிழமை அவசர அவசரமாக வடமாகாண திணைக்கள தலைவர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்களை அழைத்து அவர் உரையாடினார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் அதன் இணைத்தலைவர்களுள் ஒருவரான வடமாகாண ஆளுநரும் முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும் அங்கு கலந்து கொண்டிருந்தார். ஆளுநர் மண்டபத்த்pனுள் வருகை தந்த போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோ உள்ளுராட்சி சபைத் தலைவர்களோ எவரும் அவரை கணடுகொள்ளவோ மரியாதை வழங்கும் வகையில் எழுந்து நிற்கவோயில்லையென தற்போது அவர் கடும் சீற்றங்கொண்டுள்ளார்.
இந்நிலையில் வடக்கு மாகாண திணைக்கள தலைவர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்களை சுமார் பதினைந்து நிமிட கால அவகாசம் மட்டும் வழங்கி அழைத்துள்ளார்.அதிகாரிகளும் அலறிப்பிடித்துக்கொண்டு ஓடிச்சென்றுள்ளனர்.வடக்கு மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு நிதிச் செலவு செய்யப்படாமை குறித்து பாய்ந்து விழுந்த அவர் பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜந்தாறு நாய்கள் வந்து ஊளையி;ட்டதாக புதிய கதையொன்றை தொடங்கினார்.அந்நாள்களின் ஊளைச் சத்தம் உங்களுக்கும் கேட்டதாவென அவர் அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளை பார்த்து கேள்வியும் எழுப்பினார்.
முன்னதாக தனக்கு மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எவரும் எழுந்து மரியாதை தராமை பற்றி சீறிப்பாய்ந்திருந்தார்.அத்துடன் நாய்களது ஊளையினால் எதனையும் தன்னால் அங்கு கேட்க முடியாது போய்விட்டதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
ஆளுநர் சந்திரசிறியினது இப்பேச்சு பற்றி கருத்து வெளியிட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர் தற்போதும் தன்னை யாழ.;மாவட்ட இராணுவத்தளபதியென கருதுகிறார் போலுமென தெரிவித்ததுடன் எவரை நினைத்து அவர் நாயென கூறினாரோ தெரியவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்ட அவரிற்கும் அவர் கூறும் பெயர் பொருந்துமென தெரிவித்தார்.
ஆளுநரது விமர்சனம் பற்றி கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மக்களது பிரச்சினைகளை மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் எடுத்து கூறுவது அவருக்கு நாய்கள் குரைப்பது போல தோன்றினால் அவரை நியமித்த ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் வரை அதிலும் இக்கூட்டதிற்கு வருகை தந்திருந்த அமைச்சர் ஈறாக அனைவருமே நாய்களாகிவிடுவர்.சிலருக்கு கண்ட கண்ட நாய்களை எல்லாம் வளர்க்கும் ஒரு வகை மேனியாவிருக்கின்றது.அது ஆளுநருக்கும் இருப்பது போல தெரிவதால் அவர் உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லதென தெரிவித்தார்.
No comments:
Post a Comment