Translate

Thursday, 11 October 2012

மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன'-பிரான்செஸ் ஹரிசன்


மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன'-பிரான்செஸ் ஹரிசன்
கேள்வி: சிறிலங்காவில் மீண்டும் தமிழர் போராட்டம் வெடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதா?

பதில்: ஆம், ஆனால் உடனடியாக இல்லை. நான் எனது புத்தகத்திற்காக நேர்காணல் மேற்கொண்ட எந்தவொரு புலி உறுப்பினர்களும் உடனடியாகப் போர் தொடங்க வேண்டும் எனக் கூறவில்லை.


தமிழ் மக்களின் அவாக்களை சிறிலங்கா அரசாங்கம் ஏற்று அவற்றை நிறைவேற்றாவிட்டால், இது அடுத்த தலைமுறையினர் ஆயுதப் போராட்டம் ஒன்றை மீண்டும் தொடங்க காலாக அமையலாம். சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்காவிட்டால், அடுத்த தலைமுறை மிக மோசமாக எழுச்சி கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பிரபாகரன் சிறுவனாக இருந்த போது தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலகங்களைக் கேள்விப்பட்டார். இதுவே பிரபாகரன் ஆயுதம் தூக்க தூண்டுதலாக இருந்தது. இதேபோன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சிறார்கள் கேள்விப்பட்டால் என்ன நடக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? சுற்றுவட்டம் போன்று இடம்பெறும் பழிவாங்கல்களும், வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment