Translate

Wednesday 13 June 2012

சிவ்சங்கர் மேனன் இலங்கை விஜயம்! கொழும்பில் முக்கிய பேச்சு!!


இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கை விஜயம்! கொழும்பில் முக்கிய பேச்சு!!
 திருகோணமலையிலுள்ள இந்திய எண்ணெய்க் குதங்களை இலங்கை மீளப்பெறவுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ள சூழ்நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கோண்டு எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.



கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இதர அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் சிவ்சங்கர் மேனன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார் என அறியமுடிகின்றது.

சிவ்சங்கர் மேனனின் கொழும்பு விஜயமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதொன்றல்ல என்றும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் முக்கிய பேச்சுகளை நடத்தவே அவர் அவசரமாக இலங்கை வருகிறார் எனவும் அறியமுடிகின்றது.

முன்னதாக, திருகோணமலையில் இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள 99 எண்ணெய்க் குதங்களையும் இலங்கை அரசு மீளப்பெற உத்தேசித்து வருகின்றது என கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.

கடந்த 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில், பெற்றோலிய வள அமைச்சு இந்தக் குதங்களை 33 ஆண்டுகள் குத்தகைக்கு லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது. இவ்வாறு செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டில் குறைபாடுகள் இருக்கின்றன எனவும், ஆனால், அவற்றைக் கருத்திற்கொண்டு இந்தக் குதங்களை மீளப்பெற மஹிந்த அரசு ஆராய்ந்து வருகிறது என்றும் கடந்த வாரம் வெளிவந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.

http://www.pongutham...24-dfb0f983356b 

No comments:

Post a Comment