Translate

Saturday, 16 June 2012

வடக்கின் ஆட்சி இராணுவத்தின் கையில்!-மாவை!


எங்களது தேசத்தில் எங்களை நாம் ஆளக்கூடியவர்களாக இருக்க வேண்டும் ஆனால் வடக்கில் நடப்பது என்ன? வடக்கின் ஆட்சியில் இராணுவமும் ஆளுநரும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கான தலமைத்துவம் மற்றும் ஆட்சி நிர்வாகம் பற்றிய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர்  மேற்கண்டவாறு கூறினார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
எங்களது தேசத்தில் எங்களை நாம் ஆளக்கூடியவர்களாக இருக்க வேண்டும் அனால் வடக்கில் நடப்பது என்ன? வடக்கின் ஆட்சியில் இராணுவமும் ஆளுநரும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.
எமது நிலங்களை நாம் ஆளுவதற்குரிய முயற்சியாக எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். சர்வதேசத்தின் கரங்களைப் பற்றிக் கொள்வதன் மூலம் எமக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.
உள்ளூர் மட்டத்திலிருந்து எங்களைத் தயார்படுத்தி எதிர்காலத்தில் எமது பிரதேசத்தையும் இளைய சமூகத்தையும் அபிவிருத்திப் பாதையூடாக கொண்டுசெல்ல வேண்டும்.
உள்ளூராட்சி சபைகளில் இருப்பவர்களுக்காக இந்தியா மற்றும் கனடாவில் உள்ள உள்ளூராட்சி நிர்வாக கட்டமைப்புக்கள் பற்றியும் அங்குள்ள சபைகளின் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் வெளிநாட்டவர்களை அழைத்து பயிற்சி கொடுக்கவுள்ளோம்' என்றார்.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் எஸ். மகாலிங்கம், யாழ்.இந்திய துணைத்தூதரக அதிகாரி இராசமாணிக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சீ.வி.கே. சிவஞானம் மற்றும் உள்ளூராட்சி சபை தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment