Translate

Saturday, 16 June 2012

இராணுவத்தின் மிரட்டலால் உண்மைகளைச் சொல்ல அஞ்சும் ஈழத்தமிழர்கள் – இந்திய குழு


இராணுவத்தின் மிரட்டலால் உண்மைகளைச் சொல்ல அஞ்சும் ஈழத்தமிழர்கள் – இந்திய குழு

பார்வர்ட் பிளாக் எம்.பி. வருண் முகர்ஜி தலைமையில் கதிரவன் எம்.எல்.ஏ பார்வர்ட் பிளாக் தேசிய செயலாளர் தேவராஜன் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழர் பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
இலங்கையில் தங்கியிருந்த இவர்கள் நேற்று (15) காலை விமானம் மூலம் சென்னை திரும்பினர். சென்னையில் அவர்கள் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:-

இலங்கையில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை கண்டறிய இலங்கை சென்றோம். அங்கு 3 நாள் முல்லைத்தீவு, முல்லை வாய்க்கால் கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளை பார்வையிட்டோம். அங்குள்ள முகாம்களில் தமிழர்களை சந்தித்து பேசினோம்.
தமிழர்களின் நிலை இன்னும் மிக மோசமாகத்தான் உள்ளது. இலங்கையில் நடப்பதை சொல்ல தமிழர்கள் பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இலங்கை ராணுவம் அவர்களை மிரட்டி வைத்துள்ளது. தமிழர்கள் புனரமைப்புக்கு இந்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்துள்ளது.
அந்த பணத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சாலை போடப்பட்டுள்ளதை தவிர, மற்ற அடிப்படை வசதிகள் செய்யவில்லை. தமிழர்கள் வீடு கட்ட 3 லட்சம் கொடுக்கின்றனர். அது போதுமானதாக இல்லை.
தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 89 ஆயிரம் பெண்கள் தங்களது கணவர் இறந்து விட்டாரா, அவர்கள் கதி என்னவென்று தெரியாமல் தவிக்கின்றனர். தமிழ் எம்பிக்கள், ஆளும் கட்சி எம்பிக்களை சந்தித்து பேசினோம். புத்தமத வழிபாட்டுக்கு மட்டும் முக்கியம் அளிக்கின்றனர்.
தமிழர்கள் அவதிப்படும் கொடுமைகளை பற்றி புகைப்படம், வீடியோ எடுத்துள்ளோம். நாங்கள் சேகரித்த ஆவணங்களை வைத்து பார்வர்ட் பிளாக் செயற்குழுவில் விவாதித்து அறிக்கை தயாரிக்கப்படும். அந்த அறிக்கையை இந்திய அரசிடம் வழங்குவோம். பாராளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்புவோம்.

No comments:

Post a Comment