இலங்கையில் நாள்தோறும் 80ஆயிரம் ஆண்கள், பெண் பாலியல் தொழிலாளிகளை நாடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய புள்ளி விபரத் தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதிலும் 37, 000 முதல் 45, 000 வரையிலான பெண் பாலியல் தொழிலாளிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாத்துறையின் மூலம் பாரியளவு வருமானம் ஈட்டி வரும் இலங்கையில் வெளிநாடுகளைச் சேர்ந்த பாலியல் தொழிலாளிகளும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரஸ்யா, தாய்லாந்து, இந்தியா, சீனா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த பெண் பாலியல் தொழிலாளிகள் தலைநகர் கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் தொழிலாளிகள் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment