லண்டனில் உள்ள சிறுவர்களுக்கு பொது அறிவு குறைவாக இருப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பரவலாக பொது அறிவு சார்ந்த கருத்து கணிப்பும் ஆய்வும் நடத்தப்பட்டது. அறக்கட்டளை நிறுவனம் ஒன்று, 2000க்கும் அதிகமான ஆண், பெண், வயது வித்தியாசமின்றி கருத்து கணிப்பு நடத்தியது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை குறித்து அதிகமாக கேள்விகள் கேட்கப்பட்டன. படங்களை காட்டி பதில் அளிக்கும் விதத்திலும் கேள்விகள் இருந்தன. இதில் கிடைத்த பதில்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளை கூறுகையில், எளிதான கேள்விகளுக்கு கூட தவறான பதில் அளித்தனர். பெரும்பாலானவர்களுக்கு மிக குறைந்த அளவே பொது அறிவு உள்ளது தெரிய வந்தது. பால் எப்படி கிடைக்கிறது என்ற கேள்விக்கு கோதுமையில் இருந்து கிடைப்பதாக சிறுவர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளுக்கு பால் எப்படி கிடைக்கிறது என்பது கூட தெரியாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது. வெண்ணெய் எப்படி கிடைக்கிறது? முட்டை கிடைப்பது எப்படி? பால் கிடைக்கும் விதம் போன்ற கேள்விகளுக்கு கூட சரியான பதில் அளிக்கவில்லை.
‘பேக்கன்Õ எனப்படும் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி எப்படி கிடைக்கும் என்பதற்கு கூட 16 முதல் 23 வயதுள்ளவர்களில் சுமார் 36 சதவீதம் பேர் சரியான பதில் கூறவில்லை. பால் கிடைப்பது குறித்த கேள்விக்கு 4ல் ஒருவர் அல்லது 40 சதவீதம் பேர் சரியான பதில் அளிக்கவில்லை. இதே கேள்விகளுக்கு படங்களை காட்டி சரியான பதிலுடன் பொருத்தி காட்ட பலரிடம் கோரப்பட்டது. இதில் 7 சதவீதம் சிறுவர்கள் கோதுமையை காண்பித்தனர். இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பொது அறிவு சார்ந்த தகவல்கள் அனைவருக்கும் மிகவும் அவசியம். எனவே, பொது அறிவை மக்களிடம் வளர்க்க போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அறக்கட்டளை எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment