Translate

Saturday, 16 June 2012

புலிகள் மீது தடையை நீடிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் மண்டாடும் இலங்கை !


புலிகள் மீது தடையை நீடிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் மண்டாடும் இலங்கை !
பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவர், ஆரியசிங்க நேற்றைய தினம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவரைச் சந்தித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இச் சந்திப்பின்போது, விடுதலைப் புலிகள் தொடர்பாக பல கருத்துக்களை ஐரோப்பிய ஒன்றியத் தலைவரிடம் ஆரியசிங்க எடுத்துரைத்துள்ளாராம். ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் இன்னமும் இயங்கிவருவதாகத் தெரிவித்துள்ள அவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இடுமாறு மண்டாடியுள்ளார்.


இலங்கையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்றுவருவதாகத் தெரிவித்துள்ள ஆரியசிங்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை 2006ம் ஆண்டு பயங்கரவாதப் பட்டியலில் இட்டது. அதன் பின்னர் இன்றுவரை அப்படியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இலங்கை அரசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தற்போது மேலும் அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளதும் அவதானிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment