சிறிலங்கா அரச கட்டமைப்பினாலும், இனாவாதிகளினாலும் அழுத்தங்களைச் சந்தித்துள்ள, மன்னார் மறைமாவட்ட ஆயர்
வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களை, சிறிலங்காவுக்கானஅமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டினீஸ் அவர்கள் சந்தித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான தனது பணியினை முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்குச் செல்வுள்ளநிலையில், இதன் நிமிர்த்தமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஆயர்இல்லவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த புதன்கிழமை காலை 10:30 மணிக்கு, சிறப்பு உலங்குவானுர்தி மூலம்மன்னாருக்குச் சென்ற அமெரிக்கத் தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகள், மதியபோசனத்துடன் மாலை 3:30 வரை ஆயர் இல்லத்தில் சந்திப்பில் ஈடுபட்டடிருந்தனர் எனதெரியவருகின்றது.
இச் சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது
No comments:
Post a Comment