Translate

Friday, 15 June 2012

ஸ்கொட்லான்ட் யார்ட் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கை குறித்து திருப்தி அடைய முடியாது – கெஹலிய


ஸ்கொட்லான்ட் யார்ட் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கை குறித்து திருப்தி அடைய முடியாது – கெஹலிய
ஸ்கொட்லான்ட் யார்ட் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக லண்டனில் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த, ஸ்கொட்லான்ட் யார்ட் புலனாய்வுப் பிரிவு தவறியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
கடந்த 6ம் திகதி லண்டனில் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை ஸ்கொட்லான்ட்யார்ட் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், ஓர் பார்வையாளரைப் போன்று செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஓரளவு அதிகமான தமிழ் இளைஞர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் எதிராக நடைபெற்ற போராட்டத்தினை புலம்பெயர் தமிழர்கள் நீண்ட காலமாக திட்டமிட்டு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
மக்களை கட்டுப்படுத்தல், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல், புலனாய்வு நடவடிக்கை போன்றவற்றிற்கு ஸ்கொட்லான்ட்யார்ட் மிகவும் பிரசித்தி பெற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இவ்வாறான பின்னணியை உடைய புலனாய்வுப் பிரிவினரால் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களினால் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளமையை முன்கூட்டியே அறியக் கிடைக்காமை ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
துரதிஸ்டவசமாக ஸ்கொட்லான்ட்யார்ட் புலனாய்வுப் பிரிவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றை ஸ்கொட்லானட்யார்ட் புலான்யவுப் பிரிவினரால் கட்டுப்படுத்த முடியாமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரித்தானியாவில் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதனால் குறித்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் சட்ட ரீதியான அதிகாரம் ஸ்கொட்லான்ட்யார்ட் புலனாய்வுப் பிரிவினருக்கு காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
2000மாம் ஆண்டு பிரித்தானிய பயங்கரவாத சட்டத்தின் 13ம் பிரிவின் அடிப்படையில் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
 
சட்டத்தை மதிக்கும் பிரித்தானிய பிரஜைகளும் ஒட்டுமொத்த நாடும் புலி ஆதரவாளர்களினால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை பார்வையிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
பொதுநலவாய வியாபார பேரவையில் ஜனாதிபதி ஆற்றவிருந்த உரையை பொதுநலவாய செயலகம் தன்னிச்சையாக ரத்து செய்தமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறெனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய உபசரிப்பு பாராட்டு;க்குரியது என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment