Translate

Saturday, 16 June 2012

ஜெயலலிதா தலைமையில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம்


ஜெயலலிதா  தலைமையில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம்இந்து அறநிலையத் துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதுமண ஜோடிகள் தமிழ்நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
1006 ஜோடிகளின் திருமண விழா வருகிற 18ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நடைபெறுகிறது. 

இதற்காக கோவில் அருகே பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. திருமண விழாவுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் தலைமை தாங்குகிறார். 1006 புதுமண ஜோடிகளும் பந்தலில் அமர வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா 4கிராம் தங்கத்தாலியுடன் கூடிய மாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். 



இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வாழ்த்துரை வழங்குகிறார். முன்னதாக அரசு தலைமை செயலாளர் தேபந்திரநாத் சாரங்கி வரவேற்று பேசுகிறார். 


முடிவில் தமிழ் வளர்ச்சி,அறநிலையங்கள்மற்றும் செய்தித் துறை செயலாளர் ராசாராம் நன்றி கூறுகிறார். விழாவில் அமைச்சர்கள்எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ.க்கள்முக்கிய பிரமுகர்கள்மணமக்களின் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். 


ஒரு ஜோடி உள்பட குடும்பத்தினர் 10 பேர் திருமண விழாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு தங்கும் இடமும் அறுசுவை விருந்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. 


மணமகளுக்கு பட்டுச்சேலை,ரவிக்கைமணமகனுக்கு ஜரிகை வேஷ்டி-துண்டு சட்டை வழங்கப்படுகிறது. இத்துடன் கிராம் தங்கதாலி, 6 கிராம் வெள்ளிமெட்டியும் கொடுக்கப்படுகிறது. மணமக்களுக்கு சீர்வரிசையாக பித்தளை காமாட்சியம்மன் விளக்குஎவர் சில்வர்  குங்குமச் சிமிழ்குடம்வாளிதட்டுதம்ளர்,பாத்திரங்கள்கரண்டிகள்பாய்தலையணைபோர்வை உள்பட 21பொருட்கள் வழங்கப்படுகின்றன.
 

திருமணம் நடந்த அன்றே புதுமண தம்பதியர்கள் தனி பஸ்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment