Translate

Saturday 16 June 2012

பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரனை கொல்வதற்கு உத்தரவிட்டவர் கோத்தாவே; லங்கா நியூஸ்வெப் அதிர்ச்சித் தகவல்; இராணுவம் மறுப்பு


பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரனை கொல்வதற்கு உத்தரவிட்டவர் கோத்தாவே; லங்கா நியூஸ்வெப் அதிர்ச்சித் தகவல்; இராணுவம் மறுப்பு
news
 விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 14வயது மகன் பாலச்சந்திரன்,  பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரிலேயே கொல்லப்பட்டதாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
 
 
இலங்கை இராணுவத்தின் 53ஆவது டிவிசன் தளபதியான பிரிகேடியர் கமால் குணரட்ணவின் (தற்போது மேஜர் ஜெனரல்) மேற்பார்வையிலேயே பிரபாகரன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதாக அது கூறியுள்ளது.
 
இது தொடர்பாக லங்கா நியூஸ்வெப் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:
 2009 மே 19ஆம் திகதி காலை 7.30 மணியளவில் நந்திக்கடல் அருகே பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தார். 4ஆவது விஜயபாகு காலாட்படைப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் முத்துபண்டா தலைமையிலான 8 பேர் கொண்ட இலங்கை இராணுவ அணியிடமே அவர் சரணடைந்தார்.
 
முதல் நாள் இரவே தனது தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாகவும், அவரது உடல் நந்திக்கடல் பகுதியில் உள்ள விசாரணைகளின்போது, தனது தந்தை முதல் நாள் இரவு விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் அகப்பட்டு உயிரிழந்து விட்டார் எனப் பாலச்சந்திரன் கூறியிருந்தார். 
 
தனது தந்தையின் உடல், பற்றைக்குள் கிடப்பதாகவும், முதல்நாள் இரவு மோதலில் உயிர் தப்பிய இரு பாதுகாவலர்களுடன் தான் சரணடைந்தார் எனவும் அவர் கூறினார்.
தான் தந்தையுடன் படகு ஒன்றில் தப்பிச்செல்ல முயன்றார் எனவும், தாயாராரும், சகோதரியும் இன்னொரு படகில் தப்பிச் செல்ல முயன்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
 எவ்வாறாயினும் மோதலில் தனது தந்தை கொல்லப்பட்டு விட்ட நிலையில், தாய்க்கும் சகோதரிக்கும் என்ன நடந்தது என்று தெரியாது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
தனது தந்தையும் மீதமிருந்த பாதுகாவலர்களும் படையினருடன் சண்டையிட்டனர் எனவும், அதன்போது இரு பாதுகாவலர்கள் தவிர ஏனையோர் உயிரிழந்து விட்டனர் எனவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
 
இந்த விவரங்களைப் பிரிகேடியர் கமால் குணரட்ண உடனடியாகப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தனது கைத்தொலைபேசி ஊடாகத் தெரியப்படுத்தினார். இந்த விவரங்கள் அனைத்தையும் அவர் கருணா அம்மானுக்குக் கூறினார்.
 
பாலச்சந்திரன் உயிர் தப்பினால், விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராக வருவதற்குச் சாத்தியம் உள்ளதால் அவரைக் கொன்று விடவேண்டும் என்று கருணா ஆலோசனை கூறியுள்ளார். 
 
வயதுகுறைந்த சிறுவன் என்பதால் நீதிமன்றம் அவரை விடுவித்து விடும் என்றும் அவர் கோத்தபாயவிடம் கூறியுள்ளார். அதையடுத்து கோத்தாபய ராஜபக்ஷ, பாலச்சந்திரன் கொலையைத் தனிப்பட்ட ரீதியாக மேற்பார்வை செய்யுமாறும், அவரது உடலை அழித்து விடுமாறும் உத்தரவிட்டார். இந்த விவரங்கள் இராணுவ அதிகாரி ஒருவர் மூலம் வெளிநாட்டு அரசு ஒன்றுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
 
ஏனையவர்களின் பாவங்களுக்குத் தாம் பொறுப்பேற்க விரும்பவில்லை என்று அந்த இராணுவ அதிகாரி கூறியுள்ளார். இப்படி "லங்கா நியூஸ்வெப்' தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இந்தத் தகவல்களை அடியோடு மறுத்த இராணுவத் தரப்பு இவை புனையப்பட்ட பொய்கள் என்றும் தெரிவித்தது. இதே வேளை, "லங்கா நியூஸ் வெப்' வெளியிட்ட இந்தத் தகவல்களில் தலைவர் பிரபாகரன் குறித்து சிறுவன் பாலச்சந்திரன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் படுபிழையானவை என்று வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நெருக்கமான பிரமுகர்கள் தெரிவித்தனர். 
 
"லங்கா நியூஸ்வெப்' வெளியிட்ட இந்தத் தகவல்களில் எவையும் சுயாதீனமான தரப்புக்களால் உறுதிப்படுத்தப்படவில்லை. 

No comments:

Post a Comment