Translate

Friday, 15 June 2012

நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன் : கலைஞர் _


  தமிழ் ஈழம் அமைவதுதான் எனது வாழ்வின் இலட்சியம். நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன் என கலைஞர் கருணநிதி தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கலைஞர் 89-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அவரது தொகுதியான திருவாரூரில் நடந்தது. 



இக்கூட்டத்தில் கலைஞர் பேசியதாவது, ‘’தி.மு.க. நிர்வாகிகள் மீது அ.தி.மு.க அரசு வேண்டுமென்றே வழக்குகள் போடுகிறார்கள்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளமாட்டோம். தி.மு.க. நிர்வாகிகளை நீதிமன்றம் விடுவித்தாலும் கூட அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்கிறது.

திருவாரூர் தொகுதியில் தி.மு.க. ஆட்சியில் பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அத்திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழ் ஈழம் அமைவதுதான் எனது வாழ்வின் இலட்சியம். நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன். அப்படி தமிழ் ஈழம் அமைந்து, அதற்கு அடுத்த கணமே நான் இறந்தாலும் மகிழ்ச்சிதான். நான் உயிரிழந்தால்தான் தமிழீழம் அமையும் என்றால், அதற்காக உயிரை விடவும் நான் தயார்’’ என்றார். __

No comments:

Post a Comment