Translate

Friday, 15 June 2012

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஐ.நா. வுடன் இலங்கை இணைய வேண்டும்: பான் கீ மூன் _


  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். 


அதற்கு தன்னால் ஊக்கமளிக்க முடியும் என பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணை மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளதை பான் கீ மூன் வரவேற்றுள்ளார். மேலும் வடபகுதியில் பாதுகாப்புப் படைகள் குறைக்கப்பட்டதையும் வரவேற்றுள்ள அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19/2 தீர்மானத்தை வரவேற்பதாகவும் ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் நீதி, சமத்துவம், நியாயம், நல்லிணக்கம் கிடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment