Translate

Saturday, 16 June 2012

ண்டா என்ற அந்த 33 வயது இளைஞர் இதுவரையில் யாருமே செய்திராத உலக சாதனையை செய்து நயாகரா பகுதியை உலகின் அதி கூடிய மக்கள் பார்வையிட்ட சாதனை பிரதேசம் ஆக்கியுள்ளார். 
நாம் எல்லோரும் தொலைக் காட்சியில் இந்த விந்தை சாதனையை மூச்சை பிடித்தபடி பார்த்துக் கொண்டு இருந்தோம். சாதரணமாகவே நயாகரா பகுதிக்கு சென்றாலே அருவியின் சாரலிலும் குளிர் காற்றிலும் நடுங்கி நடை தடுமாறும் எமக்கு தரையில். நிக்கோ காற்றில் கம்பியில் நடந்து அமரிக்காவில் இருந்து கனடாவுக்கு சுமார் 25 நிமிடங்கள் 19 செக்கன்கள் கால எல்லைக்குள் கடந்து வந்தார். 

தரையில் நடந்தாலே எமக்கு கால் இடறும். அத்தனை காற்றின் வேகத்தையும் எதிர்த்து சாரலின் வீச்சில் வீழாமல் தன்னை சுதாகரித்து கம்பியை அவர் கடந்த விதம் சாதாரண மனிதர்களால் கனவில் கூட முடியாதது. ஆனால் நிக்குக்கோ அதுவே கனவாக சிறு வயது முதல் இருந்ததால் இன்று அந்த சாதனையை செய்து உலகின் கண்ணை தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார். 
தன் வெற்றிக்கு இறை அருளையும் வயிற்றுப் பிழைப்புக்காக தன் முப்பாட்டன் காலம் முதல் தன் குடும்பம் செய்து வந்த இந்த கலையை கற்பித்த தன் தந்தைக்கும் முந்தையருக்கும் நன்றி கூறி பலர் இதயங்களையும் கவர்ந்து விட்டார். 


உணர்வு பூர்வமாக இருந்தது இந்த நிகழ்வு. தந்தையார் தொலை தொடர்பு மூலம் சாதனை முடியும் வரை மகனுடன் பேசிக் கொண்டிருந்த காட்சி... தாயார் தன் மகன் கம்பியில் நடந்து உலக சாதனை செய்வதற்காக தன் கைப்பட வீட்டில் செய்து கொடுத்த காலணி கணவன் சாதனையை வெற்றிகரமாக நிலை நாட்டிய பின்னும் விழிகள் அதிர்ச்சியில் வழிய கட்டி அனைத்து முத்தம் தந்த மனைவி... பெருமிதத்தில் பூரித்த பிள்ளைகள்... தன் குடும்பத்தை வெற்றிக்கு காரணமாக போற்றும் நிக்.. என ஒரு அற்புதமான சாதனை திரைப்படம் பார்த்ததுபோல்..... இதோ... அது குறித்த செய்தியின் தொகுப்பை ஆங்கிலத்திலும் தருகிறேன்...: http://media.theage.com.au/national/selections/raw-vision-tightrope-walker-makes-history-3380453.html

No comments:

Post a Comment