Translate

Friday, 15 June 2012

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கனடா எச்சரிக்கை


இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கைப்புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டுஅரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் ஆபிரிக்காவின் பெனின் நாட்டில் 148 இலங்கைப் புகலிடக்கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதனைத் n;தாடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் படகுகள் அல்லது கப்பல்கள் கனேடிய எல்லைக்குள்பிரவேசிப்பதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் இடமளிக்கப்போவதில்லை என கனேடிய குடிவரவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment