முள்ளிவாய்க்கால் எச்சங்களை அழிக்க சீனாவிலிருந்து நவீன திரவம்: இலங்கை அரசின் கடபத்தனம் அம்பலம்

இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மனித எலும்புகளை உக்க வைப்பதற்கு சீனாவிலிருந்து திரவங்களை இலங்கை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் எலும்புகளை உக்க வைப்பதற்கே இவை இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது.
யுத்தம் முடிவுற்று மூன்றாண்டுகள் முடிவுற்ற நிலையில் மேற்படி பகுதியில் இன்னமும் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில், அங்கிருக்கும் போர் எச்சங்களையும் குறிப்பாக போர்குற்றம் தொடர்பான எச்சங்களையும் அழிக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே அப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தோண்டி எடுக்கப்பட்டுவரும் நிலையில் அப்பகுதியை அங்குலம் அங்குலமாக இராணுவம் தோண்டி வருகின்ற நிலையிலேயே இச்செய்தியும் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment