முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சில முக்கிய இடங்களுக்குத் தமிழ் மக்கள் செல்வதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளால் அரிசி ஏற்றி வரப்பட்ட போது கரையொதுங்கிய 100 மீற்றர் நீளமான கப்பல் ஒன்று காணப்படுகிறது.
வன்னிப் பகுதிகளுக்கு வருகை தரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் இதனைப் பார்ப்பதற்கு முண்டியடிப்பதை காண முடிகின்றது. ஆனால் தமிழ் மக்கள் இதனைப் பார்வையிடச் செல்வதை ஏனோ இராணுவத்தினர் அனுமதிப்பதில்லை.
முஸ்லிம் மக்கள் கூட இதனைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படும் நிலையில் தமிழ் மக்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்துகின்றமை ஏன் என்று தெரியவில்லை. இதில் என்ன பாரபட்சம் என்று கேட்கின்றனர் தமிழ் மக்கள்.
மேலும் இந்தக் கப்பலை பார்வையிடச் செல்லும் பெரும்பான்மையின மக்கள் கப்பலின் அருகில் சென்று சிறிதளவு மணலையும் தம்முடன் எடுத்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது.
இவ்வாறு மண் எடுக்கும் நிகழ்வுகள் புலிகளின் முக்கிய இடங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment