தமிழர்களின் நலனுக்காக சாதி, மத பேதமின்றி பாடுபட்டுவரும் மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப் அவர்களுக்காக சர்வமதப் பிரார்த்தனை ஒன்று மன்னாரில் நிகழ்ந்ததை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்.
கலாநிதி ராயப்பு ஆண்டகையை ஒரு மதகுருவாக மட்டும் எண்ணாமல் அவர் ஓர் இனப்பற்றாளரும் மனித உரிமைக்காக உழைப்பவரும் ஆக பார்க்கப்பட்ட அந்தப் பிரார்த்தனை உலகெலாம் ஓரு புத்துணர்வை கொண்டு வந்ததை நாம் அறிவோம். இன்றைய காலகட்டத்தில் இத்தனை நெருக்கடியிலும் தனது பணியை மனிதத்திற்காக செயற்படும் அவரின் கொள்கையை எண்ணத்தை யாராலும் போற்றாமல் இருக்க முடியாது.
இவரின் திறந்த மனமும் பரந்த உள்ளமும் அங்கு நடைபெற்ற போரின் உண்மைகளை உலகிற்கு எடுத்துக் காட்ட வைத்தது. எம் இனத்தின் நன்மைக்காக அவர் செய்யும் பணிகள் வெற்றி பெறவேண்டும். அந்த உண்மைகள் யாவும் உலகிற்கு தெரியவேண்டும் என்ற மன்னாரில் நடந்த பிரார்த்தனையின் எதிரொலிதான் ஜுன் மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் (11 அல்லது 12மணி) சர்வதேச ரீதியில் சிறப்பு பிரார்த்தனைகள் மசூதிகளிலும் தேவாலயங்களிலும் கோவில்களிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தில் நடந்த இறுதிப்போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டோர் தொகை ஒன்பதினாயிரம் பேர்கள் மட்டுமே எனக் கூறியது சிறீலங்கா அரசாங்கம். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையோ அதை நாற்பதினாயிரத்திற்கு மேல் என்று ஆதாரபூர்வமாகக் காட்டியது. ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கின்படி நாற்பதினாயிரம்தான் அழிக்கப்பட்டது என்றால் இதுவரை கணக்கில் சேர்க்கப்படாத 147ஆயிரம் தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்ற அவரின் கேள்வி எங்களை மாத்திரமல்ல உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லையா? சட்டத்தின் பிடியிலிருந்து சிங்களம் தப்பலாம். ஆனால் தர்மத்தின் பிடியிலிருந்து ஓருபோதும் தப்ப முடியாது.
இந்த சர்வதேச வித்தியாசமான சர்வமதப் பிரார்த்தனையில் எம்மவர்கள் எல்லோரும் பங்கு கொண்டு பிரார்த்தித்து தமது பங்கை செலுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.
இலங்கையில் தமது எண்ணிக்கையின் பலத்தால் எம் இனத்தை அழித்து நீதியையும் புதைத்து நியாயத்திற்குப் புறம்பாக செயற்பட சிங்கள அரசால் முடியுமானால் வெளிநாட்டில் கூடிய மக்களின் எண்ணிக்கையைக் கொண்ட எம்மால் ஏன் நீதிக்காக செயற்படமுடியாது?
இச் சர்வமதப் பிரார்த்தனையில் பங்குபற்றுவதற்கான மேலதிக விபரங்களை அந்தந்த நாட்டில் வாழும் பிரதிநிதிகள் ஊடாக அறிந்து கொள்ளவும். கனடா நாட்டில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறும் இடங்களின் விபரங்களை கீழே தருகிறேன்.
நாகபூசணி அம்மன் தேவஸ்தானம் 5637 Finch Ave East, Scarborough
கற்பக விநாயகர் ஆலயம் 200 Advance Blvd, Brampton
செல்வச் சந்நிதி ஆலயம் - 1 Golden Gate Court, Scarborough
நல்லூர் கந்தசாமி கோவில் 20 Nugget Ave, Scarborough
கனடா சிறீ ஐயப்பன் ஆலயம் 635 Middlefield Ave, Scarborough
கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவில் 1537 Warden Ave, Scarborough
மேருபுரம் சிறீ மகா பத்ரகாளியம்மன் கோவில் 1510 Birchmount Road, Scarbough
மாவை சிறீ திருமுருகன் ஆலயம் 1660 Midland Ave, Scarborough
திருச்செந்தூர் முருகன் ஆலயம் 2400 Finch Ave West, North York
கனடாவில் தொடர்புகளுக்கு:
தங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலாநிதி ராம் சிவலிங்கம்
துணைப்பிரதமர் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

No comments:
Post a Comment