பிரிட்டனில் இருந்து எதிர்வரும் 28 ஆம் திகதி 100 தமிழர்கள் நாடு கடத்தல்!
இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துகின்ற நடவடிக்கைகளை பிரித்தானிய அரசு கை விட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரி உள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி சுமார் 100 தமிழர்கள் வரையானோர் பிரிட்டனின் தொடர் நடவடிக்கைகளின் கீழ் நாடு கடத்தப்பட உள்ளனர்.
இந்நிலையிலேயே கண்காணிப்பகத்தின் ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் Brad Adams இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துகின்ற நடவடிக்கைகளை பிரித்தானிய அரசு கை விட வேண்டும் என்று கோரி உள்ளார்.
பிரிட்டனில் இருந்து கடந்த தடவைகளில் நாடு கடத்தப்பட்ட தமிழர்களில் பலர் இலங்கையில் சட்டவிரோத கைது, சித்திரவதை ஆகியவற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர் என்று சுட்டிக் காட்டி உள்ளார்.
அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துகின்ற நடவடிக்கைகளை பிரித்தானியா மும்முரமாக மேற்கொண்டு வருகின்றது.
No comments:
Post a Comment