இலங்கையின் மத்திய மாகாண முஸ்லீம் பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை போல் வேடமிட்டு, நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த சம்பவம் காரணமாக, மத்திய மாகாண முதலமைச்சர் கடுப்பாகிப் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவ்வாறான நிகழ்வுகள் அரச தலைவருக்கும், அரசாங்கத்தின் கௌவரவத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இனிவரும் காலங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தோற்றத்திற்கு ஈடான வகையில் உடையணிந்து, நாடகங்களையோ, நிகழ்ச்சிகளையோ பாடசாலை மாணவர்களை கொண்டு நடத்த வேண்டாம் என பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவிடுமாறு, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாகாண கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பான சுற்றுநிருபம் அடுத்த சில தினங்களில் மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தற்போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள், நிகழ்ச்சிகள் என்பன நடைபெற்று வருகின்றன. இதற்கமைய மத்திய மாகாண முஸ்லீம் பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை போல் வேடமிட்டு, நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த சம்பவம் காரணமாகவே, முதலமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என மாகாண தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment