Translate

Saturday 25 February 2012

மனித உரிமைகளை பேசும் பாதிரிமாருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தேவானந்தா!

மனித உரிமைகளை பேசும் பாதிரிமாருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தேவானந்தா!

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கிறிஸ்தவ பாதிரிமாருக்கு அரசுத் தரப்பைச் சேர்ந்த சக்திகள், படையினர், துணை ஆயுத குழுவினர் ஆகியோரால் படுகொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்திருக்கின்றன என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு எழுத்துமூலம் அறிவித்து இருக்கின்றனர்.


அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கால் 2007 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விபரங்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைத்து உள்ளன.

இதில் இவர் முக்கியமாக எழுதி இருந்தவை வருமாறு:-

அரசுத் தரப்பைச் சேர்ந்த சக்திகள், படையினர், துணை ஆயுத குழுவினர் ஆகியோரால் படுகொலை அச்சுறுத்தல்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மனித உரிமைகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்ற கிறிஸ்தவ பாதிரிமாருக்கு விடுக்கப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இவ்வாறான படுகொலை மிரட்டல்களை விடுத்து இருக்கின்றது.

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துக்கு யாழில் குறைந்தது பாதிரிமார் இருவர் காணாமல் போய் உள்ளனர் அல்லது கொல்லப்பட்டு உள்ளனர்.

உயிருக்கு ஆபத்து நிலவுகின்றது என ஒன்பது பாதிரிமார் எமக்கு முறையிட்டு உள்ளார்கள்.

அரசுடன் சேர்ந்து இயங்குகின்ற துணை ஆயுத குழுவினரின் மனித உரிமை மீறல் செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற பாதிரிமாருக்குதான் இம்மிரட்டல்கள் விடுக்கப்பட்டு இருக்கின்றன.

No comments:

Post a Comment