Translate

Saturday 25 February 2012

வெள்ளைக் கொடி சம்வம் குறித்து நம்பியார் விளக்கம்


வெள்ளைக் கொடி சம்வம் குறித்து நம்பியார் விளக்கம்
வெள்ளைக் கொடி சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதி விஜயம் நம்பியார் விளக்கமளித்துள்ளார்.
 
சிரேஸ்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின் தம்மைத் தொடர்பு கொண்டதாகத்தெரிவித்துள்ளார். மேரி கொல்வின் அண்மையில் சிரியாவில் இடம்பெற்ற எறிகணைத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நடு இரவில் பிரித்தானிய ஊடகவியலாளர் கொல்வின் தம்மைத் தொடர்புகொண்டு புலிகள் சரணடைய விரும்புவதாகத் தெரிவித்தார் என விஜய் நம்பியார்குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற சந்தர்பத்தில் மேரில்கொல்வின் தம்மைத் n;தாடர்பு கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
 
புலிகளின் கோரிக்கை தொடர்பில் அமெரிக்க தூதுவரிடம் இரண்டுதடவைகள் தகவல்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கம் அனுமதி வழங்காத காரணத்தினால், சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினால் கடல் வழியாக சென்று சரணடைவோரைக் காப்பாற்ற முடியவில்லை என அவர்தெரிவித்துள்ளார்.
 
குறித்த பிரதேசத்திற்கு செல்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
 
நடு இரவில் மேரி தம்மை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாக அவர்தெரிவித்துள்ளார்.
 
'இருவர் தொடர்பு கொண்டனர், அவர்களின்பெயர்கள் ஞாபகமில்லை, ஒருவர் சமாதான செயலகத்தைச் சேர்ந்தவர், அவர்கள் சரடைணயவிரும்பினர். பாதுகாப்பான வழியில் சரணடையவே விரும்புவதாகத் தெரிவித்தனர். அதனை நான்ஏற்றுக்கொண்டேன். இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சரிடம் பேசினேன், ஜனாதிபதி,பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரிடமும் பேசினேன். ஏனைய கைதிகளைப் போன்றே அவர்களும்நடத்தப்படுவார்கள் என அவர்கள் உறுதியளித்தனர். அதன் பி;ன்னர் என்ன நேர்ந்தது எனத் தெரியாது'என நம்பியார் தெரிவித்துள்ளார்.
 
உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் சரணடைய விரும்பியோர் எவ்வாறுஉயிரிழந்தனர் என இன்னர் சிற்றி பிரஸ், நம்பியாரிடம் கேள்வி எழுப்பியது.
 
அதற்கு, சில வேளைகளில் சக போராளிகள் சரணடைய விரும்பியோர் மீதுதுப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எந்தவொரு ஊகத்தையும் வெளியிடத் தயாரில்லை என அவர் மேலும்தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறான கருத்தையே பெசில் ராஜபக்ஷவும் கொண்டுள்ளார் என நம்பியார்குறிப்பிட்டுள்ளார்.
 
வெள்ளைக் கொடிச் சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின்செயலாளர் பாலித கொஹணவுடன் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment