நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில பலமான பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் பின்பற்றவில்லை என்று அமெரிக்கா மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்த நேற்று வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனர்,
“நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பது குறித்த எந்தவொரு உறுதியான நடவடிக்கைத் திட்டத்தையும் சிறிலங்கா அரசிடம் இன்றுவரை காணமுடியவில்லை.
இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதியான அடியெடுத்து முன்னோக்கிச் செல்வதற்கு சிறிலங்கா அரசை நாம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.
அதேவேளை, நல்லிணக்கத்துக்கான முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கக் கோரும் தீர்மானம் ஒன்றை ஜெனிவாவில் கொண்டு வருவதற்கும் நாம் எமது பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment