இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்துக்கும், மற்றும் சொமாலியா குறித்து எடுக்கப்பட்ட பிறிதொரு படத்துக்குமாக மொத்தம் 3 விருதுகள், சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது.
சனல் 4 தொலைக்காட்சிக்கு பிரித்தானியாவில் 3 விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. றோயல் டெலிவிஷ சொசாயிட்டி எனப்படும் சமூக தொலைக்காட்சி அமைப்பு ஒன்று, வருடந்தோறும் வழங்கி வரும் விருதுகளில், இம் முறை 3 விருதுகளை சனல் 4 தட்டிச் சென்றுள்ளது. இதில் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்துக்கும் விருது கிடைத்திருப்பது ஒரு சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. இவ்விருதுகளை தட்டிச் செல்ல அல்ஜசீரா, மற்றும் BBC போன்ற சர்வதேச தொலைக்காட்சி நிறுவனங்கள் கடும்போட்டியில் இறங்கியிருந்தது.
இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்துக்கும், மற்றும் சொமாலியா குறித்து எடுக்கப்பட்ட பிறிதொரு படத்துக்குமாக மொத்தம் 3 விருதுகள், சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது. சாவு வீதி என்ற பிறிதொரு ஆவணப்படத் தயாரிப்பும் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டது. இதனைத் தவிர அடுத்த மாதம்(மார்ச்) தண்டிக்கப்படாத போர் குற்றம் என்னும் இலங்கை குறித்த அடுத்த ஆவணப்படம் ஒன்றை சனல் 4 வெளியிடவுள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இதில் பல புதிய போர் குற்ற ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் வெளிவரும் வேளை, அது பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவிக்கும் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment