சிறிலங்காவில் இடம்பெற்ற போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரும் நாடுகளுடன் நோர்வேயும் இணைந்து கொண்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்புக் கூறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக நோர்வேயும் அறிவித்துள்ளது.
நோர்வேயில் இருந்து வெளியாகும் அப்ரென்போஸ்ரன் நாளேட்டுக்கு அந்த நாட்டின் அமைச்சரும், சிறிலங்கா சமாதான முயற்சிகளில் நடுநிலையாளராகப் பங்கேற்றவருமான எரிக் சொல்ஹெய்ம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“சிறிலங்கா அரசாங்கம் போரை வென்றுவிட்டறு , ஆனால் இப்போது அமைதியை வெல்ல வேண்டிய தேவை அதற்கு உள்ளது“ என்றும் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்
No comments:
Post a Comment