எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என தமிழ் உணர்வாளரும், ஈழத்தமிழருக்காக எப்போது குரல்கொடுப்பவருமான நடிகர் சத்தியராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது, சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை கோரியும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சிறிலங்கா அரசுக்கு எதிரான ஆதரவை அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ள இந்த வேளையில் அதற்கு வலுச்சேர்க்கின்ற வகையில் தமிழர்களாகிய நாம் எமது எழுச்சியைக் காட்டவேண்டியது அவசியமாகின்றது. அந்த எழுச்சியே அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும்.
அந்த எழுச்சியை நாம் காட்டவேண்டுமானால் நமக்குள் இருக்கும் பேதங்களை, நமக்குள் இருக்கும் கிளைகள் எல்லாத்தையும் மறந்து ஒற்றைக் குடையின் கீழ் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் ஒற்றை வார்த்தைக்காக எல்லா பேதங்களையும் மறந்து நாம் பெரியளவில் ஒன்றுகூடவேண்டும்.
அந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போதுதான் உலக நாடுகளின் கவனம் நம் பக்கம் திரும்பும். எனவே எல்லோருடைய கவனத்தையும் நம் பக்கம் திருப்ப வேண்டும் என்றால் நமது ஒற்றுமையும், ஒன்றுகூடும் கூட்டத்தின் அளவுமே அதனை ஏற்படுத்தும்
No comments:
Post a Comment