Translate

Monday, 15 October 2012

சிறீலங்கா மீது போர்குற்ற விசாரணை மற்றும் பொருளாதார தடை விதிக்க வேண்டும் ஜெயலலிதா மன்மோகனுக்கு கடிதம்

ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்   ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும்  சர்வதேச நாடுகள் இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


பிரதமரிடமிருந்து தனக்கு எந்தப் பதில்களும் வராத நிலையில்   இந்திய இலங்கைக்கு ஆதரவாக செயற்படப் போவதாக ஊடககங்களில் வெளிவந்த செய்திகள் தனக்கு கவலையளிப்பதாக தெரிவித்துள்ள ஜெயலலிதா கடந்த  சில நாட்களின் முன்பாக ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பிரமதருக்கு தான் எழுதிய கடிதத்தை மீண்டும் நினைவுபடுத்துவதாக தெரிவித்தார்.

இலங்கையில் அப்பாவி ஈழத் தமிழர்களை ஈவ இரக்கமின்றி இலங்கை அரசு படுகொலை செய்துள்ளமையை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக போர்குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்றும் இந்தியா பொருளாதார உறவை துண்டிக்க வேண்டும் என்றும் தீர்மானங்களை ஏகமனதோடு நிறைவேற்றியை சுட்டிக்காட்டினார்.

ஆத்துடன் சிங்களவர்களுக்கு நிகராக  தமிழர்களுக்கும் அரசியல் உரிமைகள் சமமாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் நேரில் கேட்டக் கொண்டதையும் நினைவுபடுத்திய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா  ஈழத் தமிழர்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில்  பிரதமருக்கு எழுதியுள்ள கடிதங்களின் விபரங்கள் அனைத்தையும் நினைவுபடுத்தினார்.

No comments:

Post a Comment