Translate

Monday, 15 October 2012

900 மில்லியன் செலவில் யாழில் பெளத்த – இந்திய கலாச்சார மண்டபம்.

சிறிலங்கா அரசின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபம் ஒன்றை நிர்மாணிக்க உதவிகளை வழங்கவுள்ளது. இந்தக் கலாசார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் சுமார் 900 மில்லியன் ரூபாய்களை சிறிலங்கா அரசுக்கு வழங்கவுள்ளது.

600 பேர் அமரக் கூடியதான கேட்போர் கூடம், அங்கவீனர்களுக்கான நூல் நிலையம். தொல்பொருட் காட்சியகம் ஆகியனவற்றைக் கொண்டதாக இந்தக் கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்படும்.
தெற்கையும் வடக்கையும் இணைக்கும் ஒரு கலாசார மையமாகவே இது செயற்படும் என அறிவிக்கப்படுகிறது.

http://thaaitamil.com/?p=35356 

No comments:

Post a Comment