இலங்கை-இந்திய பனிப்போர் உக்கிரம்! விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முடிவு?
இதன் அடிப்படையில் மாறிவரும் அரசியல் சுழற்சிக்கேற்ப தனது முடிவில் அது மாறுதலை ஏற்படுத்த அது முடிவுக்கு வநதுள்ளது.இலங்கை இந்தியாவுக்கிடையில் உக்கிர பனிப்போர் உச்சம் பெற்றுவரும் நிலையில் இந்தியா தனது வெளிவிவகார கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த அரசியல் வட்டாரங்கள் முடிவு செய்துள்ளன.
இலங்கை கடற்படை இந்திய தமிழக மீனவர்களை குறிவைத்து நடத்திவரும் தாக்குதலை கண்டுகொள்ளமால் மத்திய அரசு இருக்க அதனை சாட்டாக வைத்து இலங்கை கடற்படை தனது வெறித்தனத்தை தொடராக காட்டி வருகிறது. இது இந்தியாவை வலிந்து தாக்குதலுக்கு இழுக்கும் முயற்சிக்கு ஒப்பானது.
இதனை மதில்மேல் பூனை போல் உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய மத்திய அரசு பாரிய அதிரடி நகர்வுக்கு காத்திருக்கிறது. தமிழ் நாடு தற்போது இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கவும் அதன் நிர்ப்பந்தம் மத்தியில் தாக்கத்தை உருவாக்கவும் வேறு வழியின்றி திக்குமுக்காடி வருகிறது ஆளும் மத்திய அரசு.
இந்த நகர்வுகளை உற்று நோக்கிய அவர்கள் அடுத்த பாய்ச்சலுக்கு தம்மை தயார்படுத்தியுள்ளனர். சீனாவின் ஆதிக்கம் இந்தியாவின் கழுத்து நெரிக்க முன் அதனை தடுக்கும் முயற்சியில் இந்திய தீவிரமாக இறங்கியுள்ளது.
இலங்கையில் பாகிஸ்தான், சீனா கூட்டாக இணைந்து இந்தியாவை அச்சுறுத்த வேறு வழியின்றி தான் அழித்த தமிழினத்தை மீள தான் வளர்க்க வேண்டிய சூழலுக்கு அது வந்துள்ளது.
தமிழகம் தமக்கு எதிராக கொதித்து எழுகிறது அவர்களின் கொந்தளிப்பை தடுக்க வேறு வழியில்லை என்ற நிலையினை காட்டி தனது கொள்கை மாற்றத்தை அது வெளிகாட்ட உள்ளது.
அதன் அடிப்படையில் தொடராக இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் றோவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தொடர் போராட்டங்கள் இடம்பெறப் போகின்றன. அவ்வழி சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு அசைந்து கொடுப்பதான தோற்றப்பாட்டில் தனது நகர்வுகளை நகர்த்த உள்ளது.
அவ்வழியே விடுதலைப்புலிகள் மீதான தடையினை முதல் தமிழகத்தில் நீக்குவது அதன் வெளிப்படை தன்மையின் பின் மத்திய அரசு நீக்குவது என்ற நிகழ்வுகள் அரங்கேற உள்ளன.
இது முதல் இலங்கையினை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வரும் முதலாவது வரலாற்று நிகழ்வாக மாற போகிறது. அதன் பின் இலங்கையின் போக்கினை மையமாக வைத்து அடுத்த கட்ட இரு நகர்வுகளை மத்தி மேற்கொள்ள உள்ளது.
ஒன்று தமிழருக்கான அரசியல் தீர்வினை வழங்குங்கள், அதனைக் கொடுக்கத் தவறின் இலங்கை புரிந்த போற்குற்றத்தை அமெரிக்காவுடன் இணைந்து வெளிக்கொண்டு வருவதான உள்ளக வெளியாக நகர்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளன .
இவை நடக்கும் போது தமிழகத்தில் மூன்றாவது கட்சி ஒன்று ஆட்சிக்கு வரும் நிலை உருவாகும் எனவும், அவர்கள் தமது நிகழ்வுகளை அரங்கேற்ற முன் நீண்ட காலம் ஆண்டு வந்த ஆளும் தமிழக அரசு அதற்கு முன் முந்தி தனது ஈழ ஆதரவினை தனது பக்கம் இழுக்க பல நகர்வுகளை மேற்கொள்ளும் எனவும் அவ்விதமான பல நிகழ்வுகளும் சில எதிர்மறையான நிகழ்வுகளும் நடந்தேறும் என டில்லியுடன் மிக நெருக்கமான அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் முன்னர் கூறிய பல விடயங்கள் நடந்தன. மீளவும் மக்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
இந்தியா சீனாவுக்கும் பனிப் போர் முற்றும் அவ்வேளை அதனை நாம் உரிய முறையில் பயன்படுத்தி எமது பிரச்சனைக்கு தீர்வினை காண வேண்டும் என அவர்கள் சொன்ன அந்த விடயங்கள் ஒன்றரை வருடம் கழித்து நடந்தது. அதே போல இப்பவும் இந்த விடயத்தினை காதில் போட்டுள்ளார்கள் நடக்கும் என நம்பலாம்.
எதிர்வரும் இந்திய தமிழக அரசியல் ஈழத் தமிழருக்கு விடியலை பெற்றுத் தர உதவுமா பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்தியா புலிகள் மீதான தடை எடுத்தால் உலகம் அதனை உடனடியாக நீக்கும் எனவும், அவ்விதம் அது நடந்தால் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசுக்கு நேரடி எதிரிகளாகவும் புலிகளின் மறைமுக வலையமைக்குகள் நேரடியாக களமிறங்கி செயற்படும் எனவும் அந்த நாடுகளினால் முடக்கப்பட்ட பல மில்லியன் புலிகளின் நிதிகளும் அவர்கள் கரம் சேரும் எனவும் அதுவே அவர்களின் இறமையுள்ள நாட்டினை உருவாக்க போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிபிட்ட விடயங்களை அந்த வட்டாரங்கள் அடித்து கூறியுள்ளன. அப்படியானால் ஏதோ நடக்க போகிறது, அதற்கான நிகழ்ச்சி நிரல்கள் தயாராகி விட்டன போல் தெரிகிறது.
இதனை உறுதிப்படுத்துவது போல சோ மற்றும் கரிகரன் பேச்சுக்கள் திசைமாறி அடித்ததனையும் இலங்கைக்கு அவர்கள் எதனையோ சொல்லாமல் சொல்லியதையும் காண முடிந்தது.
இந்த திடீர் மற்றதில் என்னமோ நடக்குது என்பதை மட்டும் ஊகிக்க முடிகிறது. தமிழக, மத்திய அரசு தேர்தல்கள் முன் பின் இவை இடம்பெறும் என எதிர்பார்க்கலாம் !
No comments:
Post a Comment