
எதிர்வரும் மார்ச் மாதமளவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தேசிய இயக்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.
அண்மையில் இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகள் தொழினுட்ப குழுவின் அறிக்கையும் இந்த பேரவை கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் குழுவினர் இலங்கைக்கு வர சந்தர்ப்பம் அளித்தமை தொடர்பில் வசந்த பண்டார தமது கண்டனத்தை வெளியிட்டார்.
குறித்த செயற்பாட்டினால் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நாடுகளுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
No comments:
Post a Comment