Translate

Sunday, 14 October 2012

ஜெனீவா கூட்டத்திற்கு சிங்களம் 15 கோடி ரூபா ஒதுக்கீடு

ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை அமர்வில் சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்காக ஏற்படும் செலவுகளுக்கு 15 கோடி ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.

இந்தத் தொகையை வழங்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மதிப்பீட்டு அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, மனித உரிமைப் பேரவை மகாநாட்டுக்கு சிறிலங்கா அரச தரப்பில் யாரைத் தலைமை தாங்கச் செய்வது என்பது தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எட்டப்படவில்லை எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
http://thaaitamil.com/?p=35215 

No comments:

Post a Comment