இலங்கையில் இயங்கிய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம், இலங்கை குறித்த தகவல்களை திரட்டிக் கொண்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் திகதி ஒஸ்லோவில் உள்ள அமெரிக்க தூதரகரத்தின் தூதுவர் கிலின்ட் வில்லியம்சன்னினால் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய தகவல் ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் யுத்த காலத்தில் இயங்கிய கெயார் அமைப்பின் 300 பணியாளர்கள் யுத்த பிரதேசத்தில் இருப்பதாவும், அவர்களிடம் இருந்து வாராவாரம் இலங்கையின் நடப்பு அறிக்கையை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபரங்களை ஒஸ்லோவில் உள்ள கெயார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஊடாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்ப முடியும் என்று, கெயார் நிறுவனத்தின் இலங்கை தலைவர் நில்ஸ் மோர்க் தம்மிடம் தெரிவித்ததாக, ஒஸ்லோவின் அமெரிக்க தூதுவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் பின்னர் இலங்கை குறித்த பல்வேறு விபரங்கள் திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment