Translate

Wednesday, 17 October 2012

தெரிவுக்குழுவுக்கு வராவிட்டால் தீர்வு ஒருபோதும் சாத்தியமில்லை!

அரசாங்கம் மீண்டும் திட்டவட்டம்

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இந்தியாவிடம் தீர்வு கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா உட்பட வெளிநாடுகளிடம் தீர்வுக்காக செல்வதை விடுத்து எம்முடன் தெரிவுக்குழுவில் இணக்கப் பாட்டுக்கு வரவேண்டும். அவ்வாறு இல்லையயன்றால் அரசியல் தீர்வு எக்காலத்திலும் சாத்தியமற்றதாகிவிடும் என்று அரசாங்கம் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது.
 

இது தொடர்பில் அரசாங்கம் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள பாரா ளுமன்றத் தெரிவுக்குழுவின் கதவுகள் திறந்தே உள்ளன. இதில் கலந்து கொண்டு தமிழ் மக்க ளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற் றுக் கொள்ள கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டும். இந்தியாவிடம் தீர்வுக்காக கையேந்துவதால் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை என்றும் அரசாங்கம் தெரவித்துள்ளது. இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெயஹலிய ரம்புக்வெல கூறு கையில், சம்பந்தன் தலைமையிலான கூட்ட மைப்புக் குழுவினர் இந்தியாவுக்குச் சென்று இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்துப் பேசியுள்ளனர். இந்தியாவால் எவ்வித நடவடிக்கையையும் எடுக்க இயலாது ஏனெனில் இலங்கை ஒரு சுயாதீனமான நாடு. மக்கள் ஆணையில் ஆட்சிபீடம் ஏறியுள்ள அரசே உள்ளது. எனவே தனது மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்று உள்நாட்டு அரசுக்குத் தெரியும். ஏனைய நாடுக ளால் தலையிட முடியாது. இதனைப் பலமுறை கூறியுள்ளோம். நிலையான அரசியல்தீர்வுக்கு நிரந்தர இட மாக பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைச் சரவையே அங்கீகரித்துள்ளது. இதற்கான சூழல் காணப்படுகின்றது. எனவே இதனை முறையாகப் பயன் படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள கூட்டமைப்பு முயற் சிக்க வேண்டும். இதை விட்டு இந்தியாவிடம் தீர்வைக் கோருவது வேடிக்கையான விடயம் எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment