Translate

Friday 19 October 2012

இழப்புகளுக்கு நாங்கள் முடிவு கட்டி விட்டோம் இனிமேல் யுத்தம் வராது; மக்கள் மத்தியில் டக்ளஸ் முழக்கம்

news
இனிமேல் யுத்தம் வராது வருவதற்கும் நாங்கள் இடமளிக்கக் கூடாது என மக்கள் முன்னிலையில் முழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 
நேற்று நடைபெற்ற திவிநெகும சட்டத்தை அமூல்படுத்த கோரி  நேற்று யாழ். மணிக்கூட்டு வீதியில் இருந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி யாழ். மாவட்ட செயலக முன்றலில் நிறைவுபெற்றது. அதன் போது ஆயிரக் கணக்கான மக்கள் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 
 
நான் உங்களுக்கு பிறம்பாகவோ வெளியிலோ இருந்து கொண்டு எதனையும் செய்யவோ சொல்லவோ இல்லை. உங்களுடன் இருந்து கொண்டு தான் உங்களுடன் வாழ்ந்து கொண்டு தான் நான் என்னுடைய கருத்துக்களையும் செயற்பாடுகளையும் செய்து வருகின்றேன்.
 
இங்குள்ள சுயலாப அரசியல் வாதிகள் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பாமல் பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக ஆக்கிக் கொண்டு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்.
 
அதன்படி கடந்த காலங்களில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஊடாக எங்களுடைய மக்கள் சொல்லெணாத் துயரத்திற்கு உட்பட்டார்கள் இதனால் இடம்பெயர்வு உயிரிழப்பு, சொத்திழப்பு என பல இழப்புக்களுக்கு உட்பட்டனர்.
 
எனினும் அதற்கெல்லாம் நாங்கள் ஒரு தீர்க்கமான முடிவைக் கண்டிருக்கிறோம் இந்த கொடிய யுத்தத்திற்கு நாங்கள் ஒரு முடிவைக் கண்டுள்ளோம். 
 
இனிமேல் யுத்தம் வராது. வருவதற்கும் நாங்கள் இடம்கொடுக்கக் கூடாது. உங்களுக்கு கௌரவமான ஒளிமயமான வாழ்க்கையை நாம் ஏற்படுத்தித் தருவோம். 
 
ஜனாதிபதியும் அதில் தெளிவாக இருக்கிறார். பாராபட்சமற்ற முறையில் நாடுதழுவிய ரீதியில் தான் எமது அரசாங்கம் செயற்பாட்டைக் கொண்டுள்ளது.
 
மேலும் மழைகாலம் ஆரம்பித்துள்ளதனால் விதை நாற்றுக்கள் கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ஊடாகவும் இது வழங்கப்படும்.
 
உங்களது காலில் இருந்து வாழ்க்கையினை நடாத்தக் கூடிய நிலையினை நாம் ஏற்படுத்தித் தருவோம். நம்பிக்கை தான் வாழ்க்கை பொறுமையாக இருங்கள் என்றார். 
 
இதேவேளை மக்கள் கூட்டம் திரண்டிருந்த போதும் முன்பந்திக்கு மட்டும் வடை என்றது போல முன்னுக்கு நின்றவர்களுக்கு மட்டுமே அமைச்சர்  கூறிய வீரவசனங்கள் கேட்டன. பின்னால் நின்றவர்கள் யாருக்குமே என்ன நடக்கிறது என்றது கூட தெரியாது மக்கள் வெயிலில் காத்திருந்தனர். மக்களையும் மேடையையும் கண்டால் பேச்சுக்கு குறையாது.
 
மகஜர் கையளித்தவுடன் கலையத் தொடங்கிய மக்களுக்கு வாகனங்களில் வைத்து பால் பைக்கற்று வழங்கப்பட்டது அதிலும் பலர் ஏமாற்றப்பட்டனர். பைக்கற்றுக்கள் முடிந்ததுவுடன் பால் பைகளை வாங்க லைனில் நின்ற மக்களிடம் கூறப்பட்ட விடயம் நீங்கள் வந்த பஸ்சிற்குள் பால் பைகள் உள்ளது அங்கு போய் குடியுங்கள் என்று. நம்பிச் சென்றனர் மக்கள் 
 
அமைச்சரின் செய்கைகளும் செயற்பாடுகளும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

No comments:

Post a Comment