கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றிபெற்றிருந்தால் ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்கியிருப்பேன் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்குமாறு கோரி நேற்று கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் தேசிய பிக்குகள் முன்னணி எற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எம்மீது அழுத்தங்களை பிரயோகித்து, எமது குடும்பங்களுக்கு அச்சுறுத்தல்களை விடுத்து, வாக்குகள் கொள்ளையிடப்பட்டிருக்காவிட்டால், இப்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட்டிருக்கும்.
சில வேளைகளில் முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படக் கூடும் எனவும், அதற்காக இப்போதிருந்தே பொதுவான எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவரை தயார்படுத்த வேண்டும். என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தல் 2010 ஆண்டு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment