(ஆறாம் பாகம்)
சிங்கப்பூர் என்ற நாட்டின் பெயர், ஒரு தமிழ்ச் சொல்லில் இருந்து பிறந்தது என்று பெருமை கொள்கின்றோம். (உண்மையில் அது ஒரு சமஸ்கிருதப் பெயர்) ஆனால், ஈராக், ஒரு சுத்த தமிழ்ச் சொல்லைக் கொண்ட நாட்டின் பெயர் என்பது, எத்தனை பேருக்கு தெரியும்? ஹரப்பா போன்று, சம காலத்திய மெசப்பத்தோமிய நாகரீகம் தோன்றிய இடத்தின் பெயர் "ஊர்"! ஊர் என்பது பின்னாளில் உருக், எரேக் என்று மருவி, அதுவே இன்று ஈராக் என்று அழைக்கப் படுகின்றது. அப்படியானால், ஈராக்கில் தமிழர்களின் முன்னோர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருக்க வேண்டுமல்லவா? தமிழர்களின் ஈராக்கிய மைத்துனர்கள் பிற்காலத்தில் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட ஒரே காரணத்திற்காக, பண்டைத் தமிழர்களின் வரலாற்றை புறக்கணித்து விட முடியுமா? ஈராக்கியர்கள் இஸ்லாமியராக மாறுவதற்கு முன்னர், கிறிஸ்தவர்களாகவும், யூதர்களாகவும் இருந்துள்ளனர். அதற்கும் முன்னர்? இந்து மதத் தெய்வங்களை ஒத்த, திராவிட தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். அவை பற்றி நாம் மேலும் ஆராய்வது அவசியமானது. அப்போது தான், "குமரி கண்ட நாகரீகம்" என்ற கற்பனைக் கதையாடலுக்கு முரணான, நிஜமான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
"ஆரியர்கள் எல்லோரும் வெள்ளையினத்தவர்கள், திராவிடர்கள் எல்லோரும் கறுப்பினத்தவர்கள்" என்ற கூற்று எவ்வளவு தூரம் சரியானது? முதலில் வெள்ளை-கருப்பு பாகுபாடு எப்போது தோன்றியது?................... READ MORE
No comments:
Post a Comment