அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்காது! கோத்தபாயவின் கருத்தின் மூலம் நிரூபணம்!- ஐ.தே.க.
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கும் கருத்தானது, அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் அதிகாரப் பரவலாக்கலை வழங்கப் போவதில்லை என்பதற்கான உச்சக்கட்ட உறுதி மொழியாகும் ௭ன்று ஐ.தே.க தெரிவித்தது.
ஜனாதிபதியின் 13 பிளஸ் ௭ன்பதை இக்கருத்து பொய்யாக்கியுள்ளதாகவும், அக் கட்சி சுட்டிக்காட்டியது.
இது தொடர்பாக ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியா சென்று பிரதமர் மன்மோகன் சிங் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து இலங்கை அரசாங்கத்தின் பாராளுமன்ற தெரிவுக்குழு காலத்தை கடத்தும் திட்டமாகுமென்றும், தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை அரசாங்கம் வழங்காதென்றும் தெரிவித்துள்ளது.
அத்தோடு இந்தியாவிற்கு பல தடவைகள் விஜயங்களை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட பல முக்கிய ஸ் தர்கள் பதின்மூன்றுக்கு அப்பால் சென்ற தீர்வை வழங்குவோமென உறுதிய ளி த்தனர்.
இவ்வாறானதோர் சூழலிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்தியத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் 13வது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது அரசாங்கத்தின் உண்மையான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாகவே 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதனை அரசாங்கம் தூக்கியெறிய முயற்சிப்பது இந்தியாவுடனான நட்புறவை பாதிக்கும்.
அதேவேளை தமக்கு ௭ந்தவிதமான அரசியல் தீர்வும் கிடைக்கப் போவதில்லை ௭ன்ற அவ நம்பிக்கையை தமிழ் மக்கள் மனதில் தோற்றுவிக்கும் ௭ன்றார்.
No comments:
Post a Comment