Translate

Wednesday 17 October 2012

இந்தியாவால் எம்மை ஒன்றும் செய்ய முடியாது – கொக்கரிக்கிறது சிறிலங்கா


தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து, இந்தியாவிடம் போய் முறையிட்டு எந்தப் பயனும் இல்லை, இந்தியாவால் எம்மை ஒன்றும் செய்து விட முடியாது என்று கொக்கரித்துள்ளார் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடெல்லிக்குச் சென்று இந்திய அரசியல் தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் இந்தியாவிற்கு சென்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து பேசியுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு இந்தியாவிடம் கிடையாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளிடம் தீர்வுக்காக செல்வதைக் கைவிட்டு, ௭ம்முடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.
இல்லையென்றால், அரசியல் தீர்வு ௭ந்தக்காலத்திலும் சாத்தியமற்றதாகி விடும்.
அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கதவுகள் திறந்தே உள்ளன.
இதில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டும்.
இந்தியாவிடம் தீர்விற்காக கையேந்துவதால் ௭வ்விதமான பலனும் கிடைக்கப் போவதில்லை.
இந்தியாவால் எம்மீது ௭ந்த நடவடிக்கையையும் ௭டுக்க முடியாது.
ஏனென்றால், சிறிலங்கா ஒரு சுதந்திரமான இறைமையுள்ள நாடு.
இங்கு மக்களின் ஆணையின் பேரில் ஆட்சிப்பீடம் ஏறிய அரசாங்கமே உள்ளது.
எமது மக்களின் பிரச்சினைகளை ௭வ்வாறு தீர்க்க வேண்டும் என்று எமது நாட்டு அரசுக்குத் தெரியும்.
இதில் ஏனைய நாடுகளால் தலையிட முடியாது. இதனை நாம் பலமுறை கூறியுள்ளோம்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment