Translate

Thursday, 18 October 2012

மஹிந்த சிந்தனை - ஆசியாவின் ஆச்சரியம் என்று கூறிக்கொள்ளும் அரசிடம் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வை வழங்கும் சிந்தனை இல்லை: - எஸ்.சிறிதரன்

தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்ற சிந்தனை அரசாங்கத்திடம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

யாழ் பேரூந்து நிலையம் முன்பாக புதன்கிழமை நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்.
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வரலாற்றுப் பூமியில் ஜனநாயக வழியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சிறிய ஒரு அலகைக்கொண்ட ஆட்சி முறையைக் கூட நடத்த முடியாத அளவிற்கு அரசாங்கத்தின் பயங்காரவாத செயற்பாடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

மஹிந்த சிந்தனை ஆசியாவின் ஆச்சரியம் என்று கூறிக்கொள்ளும் அரசாங்கம் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்ற சிந்தனை எண்ணத்தில கூட இல்லை. அத்துடன் பல்வேறு அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியில் பிரிவடைந்திருந்தாலும் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு கிடைக்கும் வரை அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு போராடுவோம்' என்றார்.

No comments:

Post a Comment