எங்கே போகின்றது மனித உலகம்?விஜி தமிழன்
ஈழத்தமிழ் மக்களின் உண்மைக்கும் உரிமைக்குமான விடுதலைப் போராட்டமானது மூன்று சதார்ப்த காலமாக எண்ணற்ற இடர்களுக்கும்,எத்தனையோ உயிரிழப்புக்களுக்கு மத்தியிலும் இன்றும் ஒருகணம் இடைவிடாது விடுதலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என்றால் இத்தகைய தமிழினத்தின் புனிதமான,உணர்வுமிக்க போராட்டத்தை யாராலும் எந்த சந்தர்பத்திலும் கொச்சைப்படுத்தவோ,முடக்கவோ முடியாதென்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.
அறுபது ஆண்டுகளுக்கு முன் தந்தை செல்வா ஐயா காலத்திலிருந்து ஆரம்பமான ஒரு இனத்தின் இருப்புக்கான அகிம்சைவழியிலான போராட்டமானது கடந்த முற்பது ஆண்டுகளாக தலைவர் மே.த.கு வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் காலச்சூழலின் தேவைக்கேற்ப ஆயுதம் ஏந்தி போராடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு துரோகிகளின் அர்த்தமற்ற செயட்பாடுகளினாலும் எதிரியின் சூழ்ச்சியாலும் இறுதியில் இரண்டாயிரத்து ஒன்பது முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் அனைத்தும் மொளனிக்கப்பட்டு இன்று தாயகத்தில் எமது உறவுகள் அன்றாட வாழ்க்கையை பெரும் சிரமத்துக்கு மத்தியில் நகர்த்தி செல்கின்றனர்.
அன்று தொடக்கம் இன்று வரை உலக பூமிப்பந்தில் பரந்து விரிந்து வாழும் தமிழ் மக்களை எதிரியானவன் தன்னுடைய சுய தேவைக்காக பயன்படுத்துவதும் தேவையற்று போனால் ஏறிமிதிப்பதுமாக இருந்த வண்ணம் நகர்ந்து செல்கின்றது.அது இப்பொழுது இன்னும் பெரிய அளவில் விருட்சம் பெற்று தமிழினம் என்றொரு இனம் இத்தரணியில் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லாமல் அனைத்தையும் அழித்தொளிக்கும் நடவடிக்கையில் தன்னுடைய தந்துருபமான செயல்களை மிகவும் வேகமாகவும் அமைதியாகவும் முன்னகர்த்தி செல்கின்றான்.
தாயகத்தில் எமது விடுதலை போராட்டமானது நசுக்கப்பட்டு அமைதிபெற்று இன்று புலத்திலும்,தமிழகத்திலும் முன்னெப்பொழுதும் இல்லாமல் சர்வதேச நாடுகள் பலவும் தம்பார்வையினை ஸ்ரீலங்கா அரசின்மேல் திரும்பிபார்க்கும் பொருட்டு பலவழிகளிலும் எமது உன்னதமான,உணர்வுமிக்க புனித போராட்டம் எத்தடைகளையும் தகர்த்தி ஸ்ரீலங்கா அரசிற்கு அழுத்தங்கள் பலவற்றை கொடுத்து முன்னோக்கி செல்கின்றது.
ஒற்றுமையுடன் அனைத்து தமிழ் மக்களும் மாபெரும் எழுச்சியுடன் விடுதலையை நோக்கிச்செல்லும் எமது போராட்டத்தை முடக்கிவிடவும்,காட்டிக்கொடுக் கும் நோக்குடனும் கூடவே இருந்து குழிபறிக்கும் அடையாளம் அறியமுடியாத புலித்தோல் போர்த்த பசுக்கள் ஊடுருவ ஆரம்பித்துவிட்டார்கள்.இவர்களு டன் சேர்ந்து பணத்திற்கும்,பதவிகளுக்கும் ஆசைப்பட்டு சில அமைப்புக்களும் விடுதலை விடுதலை என்று கொக்கரிக்கும் மனிதர்களும் துணைபோவது தமிழ் மக்களாகிய எமது மனதில் பெரும் பாதிப்பையும் சீற்றத்தையும் உண்டுபண்ணுகின்றது.
இக்காலகட்டத்தில் உலக நாடுகள் தம் நீதிக்கதவினை தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக திறந்துள்ள நிலையில் அவர்களுடைய உன்னிப்பான பார்வை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் திரும்பி பார்க்கும் பொருட்டு பெரும் சிரமத்துக்கும்,இழுபறிகளுக்கும் முகம்கொடுத்து திணறும் போர்குற்ற ஸ்ரீலங்கா சிங்கள அரசாங்கத்துக்கும்,மஹிந்த ராஜபக்சவுக்கும் இவர்களுடைய அநாகரிகமான பணவெறி பதவியாசைக் கலியாட்டம் அரசாங்கத்தையும் சிங்கள இனவாதிகளையும் போர்குற்ற நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் நோக்குடனே ஒவ்வொரு செயல்களும் அமைந்தவண்ணம் உள்ளது.
விடியும் என்னால் பொழுதும் தமிழ் மக்களின் வாழ்வில் சுகந்திரம் கிடைக்குமா?கிடைக்காதா?என்ற கனவுடன் விடிந்து செல்கின்றது ஒவ்வொரு காலைப்பொழுதும் என்றோருநாள் சுகந்திர தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கையுடன் எமது இலட்சிய பயணத்தில் எத்தடைகள் வரின் அத்தனையும் ஒற்றுமையுடன் உடைத்தெறிந்து இடைவிடாது தமிழீழம் நோக்கிய பயணம் தொடர்வோம்.நாளைய வரலாறு படைக்கும் சமுதாயத்திற்கு இன்றே வழி செய்வது இன்றியமையாது.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
Viji Thamil viji.thamil@yahoo.com
No comments:
Post a Comment