Translate

Thursday, 18 October 2012

இந்தியாவால் எம்மை ஒன்றும் செய்ய முடியாது – சிறிலங்கா

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து இந்தியாவிடம் போய் முறையிட்டு எந்தப் பயனும் இல்லை இந்தியாவால் எம்மை ஒன்றும் செய்து விட முடியாது என்று கொக்கரித்துள்ளார் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடெல்லிக்குச் சென்று இந்திய அரசியல் தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் இந்தியாவிற்கு சென்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து பேசியுள்ளனர்.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு இந்தியாவிடம் கிடையாது.இந்தியாவிடம் தீர்விற்காக கையேந்துவதால் ௭வ்விதமான பலனும் கிடைக்கப் போவதில்லை.இந்தியாவால் எம்மீது ௭ந்த நடவடிக்கையையும் ௭டுக்க முடியாது.

எமது மக்களின் பிரச்சினைகளை ௭வ்வாறு தீர்க்க வேண்டும் என்று எமது நாட்டு அரசுக்குத் தெரியும்.
இதில் ஏனைய நாடுகளால் தலையிட முடியாது. இதனை நாம் பலமுறை கூறியுள்ளோம்.' என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்..

No comments:

Post a Comment