Translate

Monday, 15 August 2011

பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே வணக்கம்: தூக்குக் கொட்டடியிலிருந்து நான் கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப் பட்ட நீதி


பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,
வணக்கம். 
நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவால் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள்முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன்  என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன்
என்பதால் மனித நேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின்  அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என்மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது  என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களை யெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காகத் தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப் பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.
  1. திரு.இராஜீவ் அவர்களின் கொலையை நியாப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம், மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னை போன்றவர்களும்  மரணதண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.
  2. திரு.ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11-06-1991  அன்று விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட  நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.
  3. அக்கொலைக்கு பயன்பட்ட “பெல்ட் பாம்” செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழிவகுத்தக் குற்றச்சாட்டு. இதற்க்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. இந்தியா டுடே நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள்.  ஆனால்,  “சிபிஐ யால் இறுதிவரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்றுஅந்த  “பெல்ட் பாம்” ஐ செய்தவர் யார் என்பதே என்று இந்த வழக்கை விசாரித்த தலைமை புலனாய்வு அதிகாரி திரு, இரகோத்தமன் தான் ஓய்வு பெற்றவுடன் எழுதிய நூலிலும், பல்வேறு பேட்டிகளிலும் கூறியுள்ளார். ஆக விடைத் தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா ?
  4. அந்த “பெல்ட் பாமிற்கு” 9V பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த “பெல்ட் பாம்” ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்க்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வங்கித் தந்த 9V பேட்டரி தான் பெல்ட் பாம் வெடிக்கப்பயன் படுத்தப் பட்டது என்பது  நிரூபிக்கப் படவில்லை.
  5. உண்மை என்னவெனில் நான் 9V பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9V பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கில் உள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டி கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக்கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்லவைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.
  6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டதே தவறு என்று உச்சநீதி மன்றம் இடித்துரைத்தது. காரணம் இந்த கொலை குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்லவதோ நோக்கம் இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது.
அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?
மேலும் நம் நாட்டில் வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்து தான் பல வாக்கு மூலங்கள் ரத்தத்தால் கையழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப் படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினைத் தருவது கிடையாது, ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுவேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது. 
  1. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு.தியாகராஜன் கேரளா மாநிலத்தில் 1993 ல் நடைபெற்ற அருட்சகோதரி.அபயா கொலைவழக்கை “தற்கொலை” என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும் அவரது முறைகேட்டை எதிர்த்து அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு.தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் அவர்கள் 23-06-2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்கவேண்டும்யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள் தானே இவர்கள்.. 
  2. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டதால், பெரும்பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப் பட்டன, அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற இயலாமற் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதி மன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர் நீதி மன்றம், பிறகு உச்ச நீதி மன்றம் என்று இரு முறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. இந்த செயல்பாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவி வந்தது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர்நீதி மன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைப்பட்டு போனது. இப்பொழுது தடா நடைமுறை தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும், எப்பொழுது கிடைக்கும்.
  3. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.
  4. அவர் முன்னாள் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.
  5. குற்றப் பின்னனி உள்ள குடும்பத்தை சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்கிறது தடா நீதிமன்றம்.
  6. பேரறிவாளனுக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்
  7. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத்  தூக்குத் தண்டனை வழங்கப் பட்ட நிலையில் உச்சநீதி மன்றம் அதில் 22 தூக்குத் தண்டனைகளை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒருதலைப்பட்சமாக, முன்முடிவுகளுடன் விசாரிக்கப் பட்டதென்பது தங்களுக்குப் புலப் படும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கை பொருத்தவரை கொல்லப்பட்டவர் ராஜீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது.   
இன்னொரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றுநடுநிலையுடன் விசாரிக்கப் பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும். அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம்.. ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப்போனோம் நாங்கள். நான் நிரபராதிநான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக்கயிற்றால் நசுக்கப்படுமோ
  1. திருமதி. சோனியா காந்தி அவர்கள் இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு  அத்தண்டனை நிறைவேற்றப் படவேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.
  2. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்கு கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.
  3. 1980-களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களை போல் நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மேலும் பற்று கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலை போராட்டத்திற்காக உதவி வந்தார்கள். ஒரு நாள் கூலியை கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தார்கள். ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப்போனேன்?? ஏன் தனிமை படுத்தப்பட்டேன்??  உங்களில் ஒருவன் தானே நானும்??
தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப் படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் திரு.வீ. ஆர். கிருஷ்ணய்யர்.
செய்த குற்றத்திற்கு வழங்கப் படும் தூக்குத் தண்டனையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப் படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?
2.  முடிவுறா விசாரனையில்முடிவினை நோக்கித் தள்ளப்படும் அப்பாவி நிரபராதிகளின் வாழ்க்கை.
  • ராசீவ் வழக்கை விசாரிக்க  அமைக்கப்பட்ட வர்மா கமிசன் பாதியில் முடக்கப்பட்ட்து.
  • ஜெயின் கமிசன் அறிக்கையில் காங்கிரஸ்கார்ர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற அறிக்கையோடு நிறுத்தப் பட்டது.
  • மறுவிசாரனை, வெளிப்படையாக நடைபெறுதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை
  • உலகம் முழுவதும் போற்றப்படும் முன்னாள் உச்ச நீதி மன்ற நீதியரசர் வீ.ஆர் கிருஷ்ண அய்யர், திரு.பேரறிவாளின் மடலையும் , வழக்கையும்  படித்துவிட்டு பேரறிவாளான் நிரபராதி என்று வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அவரை தண்டனைகுறைப்பு செய்து உடனடியாக சிறையில் இருந்த காலங்களை கணக்கில் கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து முன்னாள் சனாதிபதிகளுக்கும், பிரதமருக்கும் சோனியா காந்திக்கும்,  இன்னால் சனாதிபதிக்கும்,பிரதமருக்கும் மேலும் தமிழ் நாட்டின் முன்னாள் முதலைமைச்சருக்கும் தனிப்பட்ட முறையில் அழுத்தம் கொடுத்தார்.
  • முன்னாள் மத்திய சட்டஅமைச்சர் ராம்ஜெத் மலானி , இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முகாந்திரங்களும் இருப்பதாக அவர் அமைச்சராக இருக்கும் போதே அறிவித்தார்.
  • முன்னாள் மும்பை உச்ச நீதிமன்ற நீதிபதி எச். சுரேஸ் அவர்களும் பேரறிவாளனை தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய்ய அனைத்து தகுதிகளும் உள்ளதாக அறிவித்தார்.
  • சோனியா காந்தி அவர்கள், எனக்கோ என் மகனுக்கோ என் மகளுக்கோ இவர்களை தூக்கிலிடுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. உங்களிடம் (சனாதிபதியிடம்) கருணை மனு வரும்பொழுது இவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கடிதம் எழுதியிருக்கிறார்.
  • கேரளா கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில், முறைகேடுகள் செய்து நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரி திரு.தியாகராஜன் அவர்கள் பேரறிவாளனிடம் எடுத்ததாக சொல்லப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
  • இந்த வழக்கின் மூலமாக ஈழ விடுதலைப் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதும், அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களை கடுமையாக அச்சுறுத்துவதுமே, நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 
3.  பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் கோரிக்கை.
இருபத்தியோரு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இருக்கின்றேன்.. வழக்கில் இத்தனை குளறுபடிகள், முடிவடையாத விசாரணைகள், கண்டுபிடிக்க முடியாத முடிச்சுகள், இருப்பதை காரணம் கொண்டு நிரபராதியான என் மகன் உறுதியாக விடுவிக்கப்படுவான் என்று நம்பி இருந்தேன்..
உலகில் எங்கும் நடக்காத அநியாயமாக காந்திய நாடு என்று சொல்லிக்கொள்ளும், அஹிம்சையை போற்றும் இந்திய நாட்டில், ஒருவன் நிரபராதி, நிரபராதி என்று கதறிக்கொண்டிருக்கும்பொழுதே தூக்குலிட துடிக்கிறது காங்கிரஸ் அரசாங்கம்.
மக்களிடம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்று தான். பத்திரிக்கைகள் சித்தரித்தது போல் ராஜீவ் கொலையாளி, விடுதலை புலி என்று ஒருதலைப்பட்சமாக பார்க்காமல், அவனையும் ஒரு சக மனிதனாக மட்டுமே பாருங்கள். அவன் நிரபராதி என்று உரக்க கூறுவதை சற்றே கவனியுங்கள். அவனுக்கும் ராஜீவ் கொலை சதிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
இனி மக்களாகிய நீங்கள் உணர்ந்து, உங்கள் கருத்தை உரக்கச் சொன்னால் மட்டுமே என் மகனும் அவனை போல் மற்ற இருவரும் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது.
தாய்மார்கள் ஒரு தாயின் தவிப்பை உணர்ந்துஎன் மகனின் உயிர் மீட்பு போராட்டத்தில் கண்டிப்பாக என்னுடன் வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
மாணவர்களும்சட்ட வல்லுனர்களும் ஒரு வரலாற்று தவறு நிகழ்வதை இப்பொழுதே தடுக்க வேண்டும்.
மனிதஉரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் இவர்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய  ஒருசேர உரத்து குரல் கொடுக்க வேண்டும். இனியும் காலம் இல்லை என்பதை நான் சொல்லத் தேவை இல்லை என்று நம்புகிறேன்.
தமிழக மக்களின் பேராதரவுடன் இப்பொழுது ஆட்சி செய்யும் முதல்வர், தனது தற்போதைய செயல்பாடுகளினால் உலக தமிழர் அனைவரின் மனங்களிலும் போற்றப்படும் தாயாக உயர்ந்துள்ளார். அவர் தாயுள்ளம் கொண்டு, என் ஒரே மகனின் குற்றமற்ற தன்மையை உணர்ந்து, அவன் உயிர் காக்கும் அணைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று மிக பணிவுடனும், நம்பிக்கையுடனும் கோரிக்கை வைக்கிறேன்.. நாதியற்ற இந்த தாய்க்கு வேறு வழி இல்லை.
*********************************************************
ஆமாம் நான் தமிழன் தான்,ஆனால்…
ஆனால் ராஜிவ் கொலையாளிகள், அப்சல் குரு போன்றோருக்கு கொடுத்திருக்கும் தூக்கு தண்டனையையும் எதிர்க்கிறேன் இதை பற்றி என் சுற்றத்திலும், மக்களிடமும் பிராச்சாரம் செய்வேன்.அப்சல் குருவுக்கும் சேர்த்து போராடுவதில் தமிழனாக எனக்கு பெருமையே.
அதே நேரம் நான் பேரறிவாளனுக்காக மட்டும் போராடவில்லை, அமைதிப்படை நடத்திய கொலைகளுக்கு எதிர்விணையான ராஜிவை கொலை செய்த இதர இரண்டு பேருக்கும் சேர்த்தே தான் போராடப் போகிறேன்.
கடைசி கட்டமும் தாண்டியாயிற்று, மனித உயிர் போகிறது என்று மனிதாபிமானம் மட்டும் இதற்க்கு காரணமில்லை.அதிகார வர்கம் ஆதிக்க வர்கத்திற்க்கொரு நீதியும், சாதரண மக்களுக்கு ஒரு நீதியும் வைத்துக்கொண்டு வெட்கமின்றி இருக்கிறதே அதை அம்பலபடுத்த வேண்டுமென போராடுகிறேன்.
சுய‌ந‌லமாய் ச‌ந்தர்ப‌வாதியாய் போராடப்போவ‌தில்லை ஏனென்றால் இந்த உண்மையான‌ போராட்ட‌த்தில் என‌க்கு வீழ்ச்சியே இல்லை.. (நன்றி: அக்னிப் பார்வை)

Plea to cancel the death sentence wrongly given to innocent Perarivalan

http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-perarivalan

Her Excellency Smt. Pratibha Devisingh Patil [President of India]
presidentofindia@rb.nic.in

Sri M.Hamid Ansari [Vice-President of India]
vpindia@nic.in

His Excellency Mr. Manmohan Singh [Prime Minister of India]
manmohansingh@sansad.nic.in

Shri L.K. Advani [Leader of Opposition in the Lok Sabha]
advanilk@sansad.nic.in

Mr. P.CHIDAMBARAM [Home Minister of India]
hm@nic.in

Hon’ble Mr. Justice S.H. Kapadia [Supreme Court of India]
supremecourt@nic.in

Smt.Sonia Gandhi [President, Indian National Congress]
soniagandhi@sansad.nic.in

Smt.Meira Kumar [Hon’ble Lok Sabha Speaker]
speakerloksabha@sansad.nic.in

His Excellency Thiru Surjit Singh Barnala [Governor of Tamil Nadu]
govsec@tn.nic.in

Dr. J. Jayalalitha [Chief Minister of the state of Tamil Nadu]
cmcell@tn.gov.in

Hon. Justice Shri K.G. Balakrishnan [National Human Rights Commission of India]
chairnhrc@nic.in

Send Email to International Community against Death Penalty
World Coalition Against the Death Penalty
Council of Europe Theme File on Death Penalty
Amnesty International Website Against the Death Penalty
Amnesty International-USA’s Program to Abolish the Death Penalty
Death Penalty Information Center (USA)
European Day against the death penalty (Council of Europe)


tom.mackey@amnesty.org
press@amnesty.org
AmnestyIntl@amnesty.eu
iec@amnesty.org
secgen@amnesty.org
Dominic.mineo@amnesty.org.au
info@amnesty.org.nz
hrwpress@hrw.org
Eleanor.Hevey@hrw.org
press@amnesty.org.uk
feedback@humanrightsfirst.org
nyc@lchr.org
admin-au@amnesty.org
admin-bd@amnesty.org
admin-hk@amnesty.org
admin-jp@amnesty.org
amnestyis@amnesty.org
admin-np@amnesty.org
admin-nz@amnesty.org
admin-pt@amnesty.org
admin-ko@amnesty.org
admin-ta@amnesty.org
admin-th@amnesty.org
aimember@aiusa.org
aiusama@aiusa.org
aiusamw@aiusa.org
aiusane@aiusa.org
aiusaso@aiusa.org
aiusasf@aiusa.org
amnesty-is@mcr1.geonet.de
eng@amnesty.org
admin-mc@amnesty.org
info@amnesty.ca
toronto@amnesty.ca
vancouver@amnesty.ca
dwright@amnesty.ca
jpeters@amnesty.eu
info@amnesty.or.jp
amnesty@tm.net.my
aimncc@magicnet.mn
info@amnestynepal.org
campaign@amnesty.org.nz
amnesty@cyber.net.pk
section@amnesty.org.ph
aitaiwan@seed.net.tw
info@amnesty.or.th
information@deathpenalty.org
jeanne@deathpenalty.org
stefanie@deathpenalty.org
sara@deathpenalty.org
yoko@deathpenalty.org
judy@deathpenalty.org
aqeela@deathpenalty.org
aarti@deathpenalty.org
darryl@deathpenalty.org
ezitrin@deathpenalty.org
dpic@deathpenaltyinfo.org
info@abolishdeathpenalty.org
speaker@abolishdeathpenalty.org
media@abolishdeathpenalty.org
webmaster@abolishdeathpenalty.org
volunteers@abolishdeathpenalty.org
troyanthonydavis@yahoo.com
nhile@orrick.com
info@freekevincooper.org
freerobwill@gmail.com
contact@worldcoalition.org
info@ncadp.org
mj.cocher@fiacat.org
g.colin@fiacat.org
n.jeannin@fiacat.org
visites@coe.int
CommissionerHR.Communication@coe.int
cm@coe.int
deathpenaltyinfo@law.northwestern.edu
Muthamizh
Chennai

No comments:

Post a Comment