காலை 06.30 ஒன்று கூடுதல் சென்னை கண்ணகி சிலையில்
07.00 கொடியசைத்து பயணம் துவக்கம்
07.30 கத்திப்பாரா ஆலந்தூர் நகராட்சி மண்டபம் முன்பு பரப்புரை
08.30 மறைமலை நகரில் காலை சிற்றுண்டி
10.00 செங்கல்பட்டில் துண்டறிக்கை பரப்புரை
10.30 வாலாஜாபாத் பரப்புரை
11.00 காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் வரவேற்பு தேனீர் / மோர்
நகர் முழுவதும் துண்டறிக்கை வினியோகம்
நண்பகல் 12.00 காவேரிப்பாக்கம் பரப்புரை
12.30 வாலாஜாவில் பரப்புரை
01.00 ஆற்காட்டில் பரப்புரை
01.30 ரத்னகிரியில் மதிய உணவு
02.00 வேலூர் சிறை முன்பு முழக்கங்கள் நகர் முழுவதும் பரப்புரை
04.00 வேலூரிலிருந்து சென்னைக்கு
06.30 திருப்பெரும்புதூரில் பரப்புரை
08.00 சென்னை கோயம்பேட்டில் பரப்புரை
பயணத்தில் நாம் பின்பற்ற வேண்டியவை:
பயண வேகம் 40 கிமீ/மணிக்குள் செல்லவேண்டும்.
சாலையின் இடது புறத்தில் ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டும். மிக அகலமான சாலையில் இருவர் பின் இருவராக செல்ல வேண்டும்.
ஒருவரை ஒருவர் முந்தாமல் செல்ல வேண்டும்.
வழியெங்கும் அனைத்து சிறு ஊர்களிலும் பரப்புரை செய்யும்போது வண்டியை ஓட்டுபவர் இறங்கக் கூடாது. பின் இருக்கையில் வருபவர் இறங்கி பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.
நம்மோடு நான்கு மருத்துவர்கள் வருகிறார்கள். இரு பைக் மெக்கானிக்குகள் உடன் வருகிறார்கள்.
ஒரு லாரி நம்முடன் பயணிக்கிறது. இருசக்கர வாகனம் பழுதடைந்தால் லாரியில் ஏற்றிக் கொள்ளலாம்.
இரண்டு கார்களும் நம்முடன் வருகிறது. திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் காரில் ஏறி வரலாம்.
தலைக்கவசம் கட்டாயம். வாகன உரிமம், பதிவுச் சீட்டு மறக்க வேண்டாம்.
எரிபொருளை முழுமையாக நிரப்பிக் கொள்ளவும்.
இந்த முழு பயணமும் கட்சிகளைக் கடந்த ஒன்றாக இருக்க வேண்டும். கட்சிக் கொடிகளைத் தவிர்ப்போம்.
நம்முடைய நோக்கம் நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட வேண்டும். மரண தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்.
- மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்
--
என்றும் அன்புடன்,
கீற்று நந்தன்
No comments:
Post a Comment