Translate

Thursday, 22 March 2012

தமிழ் மக்களிடம் பிரதான கட்சிகள் மன்னிப்பு கோர வேண்டும் : ரணில் தெரிவிப்பு


தமிழ் மக்களிடம் பிரதான கட்சிகள் மன்னிப்பு கோர வேண்டும் : ரணில் தெரிவிப்பு
நாட்டின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்கவில்லை என அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைதியானதும், ஜனநாயக ரீதியானதுமான முறையில் குரல் கொடுக்கவில்லை.
ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளை தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்க்கத் தவறின. நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டு மொத்தமாக இணைந்து நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
முன்னாள் பிரதம டி.எஸ்.சேனாநாயக்கவின் 60ம் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment