ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் இன்றைய தினம் அதிகப்படியான 9 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
மேற்படி தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்து தற்போது அதில் வெற்றியும் கண்டுள்ளது.
இருந்தும் இத் தீர்மானத்தை வெற்றி கொள்ள அமெரிக்காவும், அதனைத் தோற்கடிக்க இலங்கையும் ஜெனீவாவில் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டு வந்தன.
அந்த வகையில் இலங்கை தன்னிடம் உள்ள பெரும்பாலான அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஜெனீவாவுக்கு அனுப்பி அங்கு ஒரு தேர்தல் பிரச்சாரமே நடத்தி முடித்தது.
இவ்வாறு இலங்கையால் அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர்கள் குழாமில் எங்கள் அமைச்சர் டக்ளஸம் சேர்க்கப்பட்டிருந்தார்.
இரண்டு முறை ஜெனீவாவுக்கு டக்ளஸ் தேவானந்தா சென்று வந்தாலும் தீர்மானம் தோற்றுப் போய் விட்டது.
தங்களின் இருப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசுடன் சேர்ந்தும், தான்தோன்றித்தனமாகவும் மீறப்படாத மனித உரிமைகளே இல்லை.
அந்தளவுக்கு இந்ததக்கூட்டத்தின் தொல்லைகள், அக்கிரமங்கள், அட்டூழியங்கள் அனைத்தும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளன.
இந் நிலையில் அதன் தலைமைத்துவத்தை ஜெனீவாவுக்கு அனுப்பி அதன் ஊடாக வெற்றி கொள்ளலாம் என இலங்கை அரச தரப்பு நினைத்துக் கொண்டது மகா தவறு.
இது இவ்வாறிருக்க ஜெனீவா செல்லும் குழுவின் தானும் இணைத்துக் கொள்ளப்பட்டவுடன் ஜெனீவா சென்று வெற்றியைக் கையில் எடுத்துக் கொண்டு வரலாம் என்ற நினைப்பில் சென்ற டக்ளஸக்கு ஏமாற்றத்தில் முடிந்தது இத் தீர்மானத்தின் வாக்களிப்பு.
வெற்றிக் கனியை ஜெனீவாவில் பிடுங்கிக் கொண்டு வார என ஒரு தடவைக்கு இரு தடவை இலங்கை அரசால் அனுப்பி வைக்கப்பட்ட டக்ளஸால் கனியை அல்ல காயைக் கூடக் கொண்டு வராத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
எனவே டக்ளஸ் உட்பட அனைத்து மனித உரிமை மீறல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை உடன் சிறையில் அடையுங்கள். அப்போதுதான் வெற்றி உங்களுக்கு.
இல்லாவிடின் நிலைமை பாரதூரமாகிப் போய் சதாம் உஷைனின் நிலைமை வருவதற்கு அதிக நேரம் எடுக்காது என்பதை இலங்கை நன்கு அறிந்திருக்கும்.
எனவே இத் தீர்மானம் தோற்றுப் போனதிலிருந்து இனியாவது சர்வதேசத்தின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து நடப்பது எதிர்கால இலங்கைக்கு ஆரோக்கியமானதாக அமையும்.
|
No comments:
Post a Comment