Translate

Friday 23 March 2012

தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவம் விலக்கப்பட வேண்டும்! இந்தியா


தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவம் விலக்கப்பட வேண்டும்! இந்தியா
தமிழர் பகுதிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் விலக்கப்பட்டு, உயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்பட வேண்டும் என, அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது உரையாற்றிய இந்திப் பிரதிநிதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

“சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது.

சிறிலங்காவில் வாழும் அனைத்து இன மற்றும் மதக் குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல்தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்த நாட்டில் கொண்டு வருவதற்கு இந்தப் பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரும் என்று இந்தியா நம்புகிறது.

அரசியல் தீர்வை சிறிலங்கா அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் என இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

13வது அரசியலமைப்புத் திருத்தத்தையும் அதற்கும் மேற்பட்ட அதிகாரங்களை பகிர்ந்தளிக்கப்படுவதை நோக்கி சிறிலங்கா அரசாங்கம் முன்னேறிச் செல்ல வேண்டும்.

பரந்துபட்ட கலந்துரையாடலுடன் கூடிய அரசியல் நடவடிக்கைகளை அது முன்னெடுக்க வேண்டும்.

மீறல்களை மேற்கொண்டவர்களை அதற்குப் பொறுப்பேற்கச் செய்வதிலும் மனிதஉரிமைகளைப் பேணுவதிலும், தனக்கு இருக்கின்ற அனைத்துலக கடப்பாடுகளை நிறைவேற்றும் நோக்கில் சிறிலங்கா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதேவேளை, நல்லிணக்கம், சமாதானம் போன்ற இலக்குகளை அடைய சிறிலங்கா போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு போதிய அவகாசமும், செயற்படுவதற்கான இடமும் வழங்கபட வேண்டும்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை சிறிலங்கா தமது இலட்சியங்களை எட்ட உதவியாக இருக்க வேண்டும், தடையாக இருக்கக் கூடாது.

காணாமல் போனவர்கள் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும்.

சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டித்தருவது, சுகாதாரம் வசதிகளை சீர்செய்வது, கண்ணிவெடிகளை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி செய்யும்.

உயர் பாதுகாப்பு வலயங்களை சிறிலங்கா அரசு உடனடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு சொந்தமான இடங்களை ஒப்படைக்க வேண்டும்.

தமிழர்கள் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும்“ என்று இந்தியப் பிரதிநிதி மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment