நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணையை தெடர்ச்சியாக வலியுறுத்துவதோடு சர்வதேசப் பாதுகாப்பு பொறிமுறை ஒன்றின் அவசியத்தினையும் கோரி நிற்கின்றோம்.
சர்வதேச அரங்குகளிலும், சர்வதேச நீதிமன்றங்களிலும் இதனை முன்னெடுக்கவுள்ளோம். அச்செயல்பாடுகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் நிபுனர் குழுவின் பரிந்துரையின் கூறப்பட்டதற் கிணங்க சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை அமைக்குமாறு செயலாளர் நாயகத்தை வலியுறுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 1 ½ மில்லியனுக்கு மேலான கையெத்துக்களை ஏற்கெனவே சேகரித்துள்ளது. இக்கையெழுத்துக்களை உலகின் பல்வேறு பாகங்களிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகங்களின் கையளிக்கும்.
இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம். உலக அரங்கில் சிங்கள பேரினவாதத்திற்கு கிடைத்த முதலாவது தோல்வியாகும்.
இது சிறி லாங்காவிற்கு கிடைத்த இறுதி தோல்வியும் அல்ல.
பிரதமர் செயலகம்நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
No comments:
Post a Comment