மே 2009ற்கு பின்னர் சர்வதேச அரங்கத்தில் மீண்டும் தமிழர் பிரச்சினை தொடர்பான விடயங்கள் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தத் தொடங்கியுள்ளது.
வேவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் அமைப்புக்களில் ஒருசிலவும், தனி நபர்களும் தனித் தனியாகவும் கூட்டாகவும் முன்னெடுத்த பல்வேறு செயற் திட்டங்கள் இதற்கு காத்திரமான பங்களிப்பினை வகித்தன.


எதிர்வரும் கால கட்டத்தில் தமிழ் மக்கள் கொடுமையான இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற விடயம் உலகத்தின் முக்கியமான தளங்களில் முன்னே நகர்த்தப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

பெருமளவு எண்ணிக்கையில் பாரிய அர்ப்பணிப்புக்களுடன் செயற்பட்ட புலம் பெயர் வாழ் தமிழ் மக்களில் பலர், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கையிழந்து இனவாத இலங்கை அரசிற்கு எதிரான செயற்பாடுகளில் பங்குபற்றுவதை தவிர்த்து வந்தது ஒரு யதார்த்தமான உண்மை.

எம் மண்ணில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடரவே செய்தது. தட்டிக் கேட்க ஆளில்லாமல் படிப்படியாக உச்ச நிலைக்கு சென்று கொண்டிருந்தது.

ஆயினும் 'இறுதி வெற்றி ஒடுக்கப்படும் மக்களிற்கே' என்ற அரசியல் சித்தாந்தத்தில் நம்பிக்கை வைத்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை தளராத நம்பிக்கையுடன் செயற்படுவதற்கு ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களை ஒன்று திரட்டி, புலத்தில் முழுமையாக மக்கள் பங்களிக்கும் பங்குபற்றல் ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டமாக இதனை முன்னெடுக்க வேண்டுமென்ற மூலோபாயத்துடன் செயற்படத் தொடங்கியது.

இதனடிப்படையில் தமிழ் மக்கள் செறிவாயுள்ள பிரதேசங்களை அடையாளங்கண்டு அந்தந்த பிரதேசங்களில் உள்ளூர் தமிழர் பேரவைகளை அவ்விடத்து மக்களே தெரிவு செய்யும் வண்ணம் தனது கட்டமைப்பை ஆழமாக விஸ்தரித்தது. 

2011ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு முன்னர் இவ்வாறு உருவாக்கிய உள்ளூர் தமிழர் பேரவைகள் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கையை வேரூன்ற வைத்தன.

இந்த வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு முன்னர் இவ்வாறான உள்ளூர் தமிழர் பேரவைகளை புதுப்பிக்கவும் விஸ்தரிக்கவும் விடுதலை மூச்சை வீச்சாக மக்களிடையே கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் பக்கம் மெதுவாக பார்வையைத் திருப்பத் தொடங்கியுள்ள சர்வதேச அரங்கத்தில் பிரித்தானிய தமிழர்களின் செயற்பாடுகள் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் இக் கால கட்டத்தில், மக்கள் தங்கள் இடத்தில் உள்ள தமிழர் பேரவைகளில் கலந்து கொண்டு உங்களால் முடிந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முன் வருமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அன்புடன் வேண்டி நிற்கின்றது.

இதனொரு கட்டமாக Eastham  தமிழர் பேரவை 12.03.2012ம் திகதி அன்று புதுப்பிக்கப்பட்டது. இதன் அடுத்தடுத்த கட்டங்களாக ஆவை Mitcham  24.03.2012ம் திகதியும் Brent  25.03.2012ம் திகதியும், Essex 31.03.2012ம் நடைபெற உள்ளதால் இச் சந்திப்புக்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஆக்க பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு பிரித்தானியத் தமிழர் பேரவை கேட்டுக் கொள்கின்றது.
Mitcham Local Forum
24.03.2012,
6.00P.M- 9.00P.M,
Casuarina Tree Restaurant,
407 London Road,
Mitcham,
R4 4BG,
Contact:             075 3356 4936      
Brent Local Forum
25.03.2012
4.00P.M- 6.00PM
Vinayagar Temple
1 The Broad Way
Wembley
HA9 8JT
            075 3950 1142      
Essex Local Forum
31.03.2012
7.30P.M- 9.30P.M
Selvavinayagar temple
Ley Street
Ilford
IG1 4NB
Contact:            075 9011 5604      
Walthamstow Local Forum
07.04.2012
7.00P.M – 9.00P.M
NO 16, Rear Chingford road,
London
E17 4PJ
079 6115 8453/             078 4175 8874      
Enfield Local Forum
01.04.2012
6.00P.M- 8.00P.M
Enfiled Nagapoosani Amman Temble
61–65 Church Lane Edmonton 
London
N9 9PZ
            079 5644 6195      
Scotland Local Forum
25.03.2012
5.00P.M- 7.00pm
Woodside Hall ,
36 Glenfarg Street
Glasgow
G20 7QF
079 2702 3912/             075 3338 1189