Translate

Friday, 23 March 2012

ஆதரவாக வாக்களிக்க பிரதிநிதிகளை மிரட்டிய இலங்கை : ஐ.நா மனித உரிமை தலைவர்

ஜெனிவா : ஐ.நா சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த தீர்மானம் வெற்றி பெற்றது அறிந்ததே. இச்சூழலில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்களை இலங்கை மிரட்டியதாக ஐ.நா சபையின் மனித உரிமை தலைவர் நவி பிள்ளை புகார் கூறியுள்ளார்.


எப்படியாவது அமெரிக்கா கொண்டு வந்த இத்தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இலங்கை பம்பரமாக வேலை செய்தும் தீர்மானம் வெற்றி பெற்றது. இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கைக்கு பெரிதும் உதவியதாக சொல்லப்படும் இந்தியா தமிழக கட்சிகளின் அழுத்தத்தால் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததும் தீர்மானம் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது.
இச்சூழலில் ஒட்டெடுப்புக்கு முன் ஏற்று கொள்ள முடியாத அளவுக்கு இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்கள், வாக்களிக்க தூண்டியவர்கள் மீது மிரட்டல்கள், எச்சரிக்கைகள், துன்புறுத்துல்கள் ஆகியவை இலங்கையில் இருந்து வந்த அரசு குழுவால் மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நா மனித உரிமை தலைவர் நவி பிள்ளை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஒட்டெடுப்புக்கு முன் இலங்கையில் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து பரப்புரை நடந்தது என்று குறிப்பிட்ட நவி பிள்ளை இலங்கைக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் தம் கையில் கிடைத்தால் அவர்களின் எலும்புகளை பொதுமக்கள் முன்னிலையில் முறிப்பேன் என்று இலங்கைபாராளுமன்ற உறுப்பினர் மெர்வின் சில்வா கூறிய வீடியோ க்ளிப்பையும் மேற்கோள் காட்டினார்

www.inneram.com 

No comments:

Post a Comment